வீடியோ: போட்டினா இதுதான்யா.. கடைசி 3 பந்து.. தேவை 4 ரன்.. ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாகசம் காட்டிய வீராங்கனை

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்பட்டு வருவது போல், கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து தி ஹன்ட்ரெட் லீக் தொடரை நடத்தி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆடவருக்கான ஹன்ட்ரெட் தொடர் நடத்தப்பட்டு வரும் அதே நேரத்தில், மகளிர் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிரின் சாதனைகளையும் மக்களிடையே நேரடியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் வேல்ஸ் ஃபயர் அணியை எதிர்த்து பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வேல்ஸ் ஃபயர் அணி 100 பந்துகளில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பேவுமண்ட் 40 பந்துகளில் 59 ரன்களும், டங்லி 25 ரன்களும் விளாசி அசத்தினர்.

- Advertisement -

அதேபோல் பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி தரப்பில் ஹன்னா பேக்கர், அர்லாட் மற்றும் லேவிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 100 பந்துகளில் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியின் ஃபிளிண்டாஃப் – சோஃபி டெவின் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய டெவின் 19 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். இதையடுத்து கூட்டணி சேர்ந்த ஃபிளிண்டாஃப் – ஜோன்ஸ் ஆனி இரண்டாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடி அரைசதம் விளாசிய ஃபிளின்டாஃப் 45 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். இறுதியாக பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணிக்கு கடைசி 5 பந்துகளில் பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது தென்னாப்பிரிக்கா வேகப்ப்பந்துவீச்சு வீராங்கனை சப்மன் இஸ்மாயில் அழைக்கப்பட்டார். அதில் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசப்பட, கடைசி 4 பந்துகளில் 5 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை வந்தது. அப்போது பந்துவீசிய இஸ்மாயில், அடுத்தடுத்து வீசிய 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் மட்டுமே பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் அணி சேர்த்தது. இதன் மூலம் வேல்ஸ் ஃபயர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. கடைசி ஓவரில் வந்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்