- Advertisement -
Homeவிளையாட்டுஇந்தியா அவங்க வேலைய காமிச்சுட்டாங்க.. அபிஷேக், ருத்து ஆடுனப்போ பெரிய தப்பு செஞ்சுட்டோம்.. வேதனையில் சிக்கந்தர்..

இந்தியா அவங்க வேலைய காமிச்சுட்டாங்க.. அபிஷேக், ருத்து ஆடுனப்போ பெரிய தப்பு செஞ்சுட்டோம்.. வேதனையில் சிக்கந்தர்..

- Advertisement-

இந்திய அணியில் சுப்மன் கில், ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ரியான் பராக் என ஐபிஎல் தொடர் உள்ளிட்ட பல டி20 லீக் தொடர்களில் சர்வதேச பந்து வீச்சாளர்களை எதிர்த்து ஆடிய வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். இப்படிப்பட்ட வீரர்கள் நிறைந்திருந்த போதிலும் முதல் போட்டியில் அவர்களை மிக சிறப்பாக சமாளித்து வெற்றியை பெற்றிருந்தது சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி.

இனிவரும் போட்டிகளிலும் அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டியில் அவர்கள் ஆடிய விதம் மிகப்பெரிய அளவில் கை கொடுக்காமல் தான் போய் உள்ளது. முதல் போட்டியில் பந்து வீச்சில் திறம்பட செயல்பட்டிருந்த ஜிம்பாப்வே அணி, இந்த முறை அதிலும் கோட்டை விட பேட்டிங் ஒட்டுமொத்தமாக கலைந்து போனது என்றே சொல்லலாம்.

இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, ஒரு கட்டத்திற்கு பிறகு அதிரடி ஆட்டத்தை மட்டும் தான் அவர்கள் கையில் எடுத்திருந்தனர். ஓவருக்கு 15 ரன்கள் வீதம் செல்ல, சில ஓவர்களில் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டிருந்தது. இதனால், அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் குவிக்க, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து ஆடி இருந்த ஜிம்பாப்வே அணியால் இலக்கை நெருங்க கூட முடியாமல், 134 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது. இதனால், 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் தோல்விக்கு தக்க பதிலடியையும் கொடுத்துள்ளது.

- Advertisement-

இந்த தோல்விக்கு பின் பேசியிருந்த ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, “கடைசியில் உலக சாம்பியன்கள் உலக சாம்பியன்கள் போல ஆடினார்கள். நிறைய கேட்ச்களை தவற விட்டது எங்கள் அணிக்கு வேதனையை உருவாக்கி இருந்தது. 200 ரன்கள் வரை இந்தியா அடிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், அதைத் தாண்டி 30 ரன்கள் அதிகமாக எடுத்து விட்டார்கள். சேசிங் செய்யும் போது கூட நாங்கள் நெருங்கி வருவோம் என்று தான் நினைத்தோம்.

ஆனால் அது நடைபெறாமல் போனது. டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எங்களின் பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் அதிக பசியுடன் இருக்க, மெல்ல மெல்ல தன்னை மேம்படுத்தியும் வருகிறார். அவர் ஃபிட்டாக இருக்கும் வரை நன்றாக பந்து வீசுவார். எங்களின் பேட்டிங் பற்றி தான் நீண்ட நாட்களாக பேச்சு இருந்து வருகிறது.

இன்று பாசிட்டிவாக வந்து சில நல்ல ஷாட்களை ஆடி இருந்தோம். ஆனால், பேட்டிங்கில் அதிக அனுபவம் இல்லாததால் அதற்குள் நிறைய சிக்கல்களும் உருவாகி இருந்தது” என சிக்கந்தர் ராசா கூறி உள்ளார்.

சற்று முன்