பதிரனாவுக்கு மலிங்கா எவ்வளவோ பரவா இல்ல. இவர் மிகவும் தந்திரமானவர் – பதிரனா குறித்து பேசிய பஞ்சாப் அணி வீரர்.

- Advertisement -

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இளம் பந்துவீச்சாளரான மதிஷா பதிரனா கிரிக்கெட் ரசிகர்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ஏனென்றால் அவர் சரியான இடத்தில் வீசும் துல்லியமான பவுலிங் மூலமாக விக்கெட்களை வீழ்த்தி, ரன்களையும் கட்டுக்கோப்பாக கொடுத்து வருகிறார்.

இதையெல்லாம் விட முக்கியக் காரணமாக. இவரின் பவுலிங் ஆக்‌ஷனும் மலிங்கா போலவே இருப்பதால் ரசிகர்கள் 20 வயதாகும் பதிரனாவை குட்டி மலிங்கா என புகழ்ந்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் நற்பெயரை பெற்ற பவுலராக இந்த சீசனில் உருவாகியுள்ளார் பதிரனா.

- Advertisement -

அவரை பற்றி புகழ்ந்து பேசிய தோனி “பதிரனா, இலங்கை அணியின் சொத்தாக எதிர்காலத்தில் இருப்பார். ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் அதிகமாக  விளையாடக் கூடாது. அந்த போட்டிகளுக்கு அவர் ஏற்றவர் இல்லை” என அட்வைஸ் செய்யும் விதமாகக் கூறியுள்ளார். தோனி, இவரைதான் டெத் ஓவர்களில் இப்போது பயன்படுத்துகிறார்.

பதிரனா மற்றும் மலிங்கா இடையிலான ஒப்பீடு, இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் ஜிம்பாப்வே அணியின் வீரரும் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருபவருமான சிக்கந்தர் ராஸா பதிரனா மலிங்காவை விட தந்திரமான பவுலர் எனப் பாராட்டியுள்ளார். அவரது கருத்தில் “பதிரனா ஒரு தரமான திறமைசாலி.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தோனியின் ஓய்வு குறித்து சி.எஸ்.கே அணிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறதா? தோனியால் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாட முடியும் – சி.எஸ்.கே பேட்டிங் கோச் கருத்து

லசித் மலிங்காவை எதிர்கொள்ள கடினமாக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது, ஆனால் பத்திரனா மலிங்காவை விட தந்திரமானவர். பந்துவீசும் போது அவரின் கை மிகவும் கீழாக வருகிறது. ஆனால்,  மலிங்கா பக்கவாட்டில் இருந்து வீசுவார். 145 கிமீ வேகத்தோடு, அவர் வீசும் கட்டர்களில் எங்கே எப்படி பந்து வரப்போகிறது என்பது தெரியாது. நான் அவர் பந்தில் ஒரு பவுண்டரியை அடிக்க முயற்சி செய்தேன். ஆனால் அந்த பந்தில் மூன்று ரன்களை மட்டுமெ எடுக்கக் கூடிய அதிர்ஷட்ம் எனக்கு கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்