- Advertisement 3-
Homeவிளையாட்டுகில், ஜெய்ஸ்வால் நிலைமை தான் பாவம்.. டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுக்கு காத்திருக்கும் சோதனை..

கில், ஜெய்ஸ்வால் நிலைமை தான் பாவம்.. டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுக்கு காத்திருக்கும் சோதனை..

- Advertisement 1-

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. பொதுவாக இந்திய அணி எந்த வெளிநாட்டு மண்ணிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்குள்ள பிட்ச்கள் பற்றி அதிக அளவில் விமர்சனம் வராது. ஆனால் அதே வேளையில் வேறு வெளிநாட்டு அணிகள் இந்திய மண்ணிற்கு ஆட வந்தால் தொடர்ந்து இந்திய பிட்ச் குறித்தும், சுழற்பந்துக்கு மட்டுமே சாதகமாக இருப்பது குறித்தும் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைப்பார்கள்.

ஒரு சில சமயங்களில் ஒன்று, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிந்தால் அதற்கு முழு காரணமும் பிட்ச் தான் என்றும் அது இந்தியாவிற்கு சாதகமாக மட்டும் தான் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பல்வேறு விமர்சனங்களையும் கூட வாய்கூசாமல் சொல்வார்கள்.

தொடர்ந்து அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவிற்கு மட்டும் இது போன்ற ஒரு நிலைமை இருப்பதால் இந்திய அணி சார்பிலும் பல்வேறு பதிலடி கருத்துக்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு தான் வருகிறது. அதே வேளையில், முன்பு போல இல்லாமல் தற்போது இளம் வீரர்களும் அதிகமாக டெஸ்ட் போட்டிகளிலும் ஆடும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

டி 20, ஒருநாள் போட்டிகளை போல இதிலும் அதிரடி ஆட்டத்தை கடைபிடிக்காமல் டெஸ்ட் போட்டியை போன்று அவர்கள் ஆட வேண்டும் என்பது தான் பலரின் அறிவுரையாகவும் இளைஞர்களுக்கு உள்ளது. இதனிடையே நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டால் இந்திய ஆடுகளங்கள் பற்றியும் இந்திய அணியின் இளம் வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“இந்திய பிட்ச்சை பற்றி விமர்சிப்பது நியாயமானது கிடையாது. நியூசிலாந்து பிட்ச்சில் சுமார் 15 முதல் 18 மில்லி மீட்டர் அளவுக்கு புற்கள் வளர்ந்திருப்பதால் தான் அவர்கள் தங்களின் மண்ணில் வெற்றி காண்கிறார்கள். எனவே இந்திய அணியும் தங்களின் சாதகத்திற்காக பிட்ச்சை ரெடி செய்வது தவறு கிடையாது.

ஆனால் இது போன்ற மைதானங்களில் ஆடுவதன் மூலமாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் 200 ரன்களை அடிக்க முடியுமா?. சச்சின், டிராவிட், சேவாக் லட்சுமண் போல இவர்களிடம் 55, 54 என சராசரியை நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் முதல் நாளில் இருந்தே அவர்கள் சுழல் பந்துவீச்சுக்கு இணக்கமாக இருக்கும் பிட்ச்களில் விளையாடுவதால் அவர்களிடம் அப்படிப்பட்ட சராசரியை எதிர்பார்க்க முடியாது” என சைமன் டால் தெரிவித்துள்ளார்.

இதே போல டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் தொடர்பான விஷயத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்