- Advertisement -
Homeவிளையாட்டுஅவர் ரொம்ப டேஞ்சர்.. பும்ரா ஓவர்ல இருந்து அவுட்டாகாம தப்பிக்க இதான் ஒரே வழி.. சைமன்...

அவர் ரொம்ப டேஞ்சர்.. பும்ரா ஓவர்ல இருந்து அவுட்டாகாம தப்பிக்க இதான் ஒரே வழி.. சைமன் கேடிச் கொடுத்த ஐடியா..

- Advertisement-

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி வந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு தலைவலியாக இருந்து வருவது பும்ராவின் பந்து வீச்சு தான். என்னதான் மற்ற பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடிந்தாலும் பும்ராவை பல முறை எதிர்கொண்டும் அவரை சமாளிக்கவே முடிவதில்லை.

இந்திய அணியின் பேட்டிங் கூட பலவீனமாக இருந்து வருவதால் ஆஸ்திரேலிய அணி அவர்களது விக்கெட்டை எளிதாக எடுத்து விடுகிறது. இதே போல இந்திய அணியின் பந்து வீச்சையும் அவர்கள் சிறப்பாக எதிர்கொண்டாலும் பும்ரா தான் அச்சுறுத்துதலை கொடுத்து வருகிறார். இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பும்ரா (21 விக்கெட்டுகள்) தான் வீழ்த்தி உள்ளார்.

ஸ்டார்க், கம்மின்ஸ் என ஆஸ்திரேலிய அணியின் ஆபத்தான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் அவர்களை தாண்டி பும்ரா பட்டையை கிளப்பி வருவது ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்வதில் சிக்கலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பும்ராவின் பந்து வீச்சை எதிர்த்து ஆடும் திட்டத்தை வகுத்தால் தான் ஆஸ்திரேலிய அணியால் வெற்றிகளை பெற முடியும்.

இந்த நிலையில், பும்ராவின் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் கேடிச் தங்களது வீரர்களுக்கு சில ஆலோசனைகளை கொடுத்துள்ளார். “அனைவரும் பும்ராவுக்கு எதிராக நல்ல பாசிட்டிவ் நோக்கத்துடன் ஆட வேண்டும் என்று கூறுகின்றனர். அது நிச்சயம் சிறந்த முடிவு தான்.

- Advertisement-

மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் அதை கவனத்திலும் கொள்ள வேண்டும். ஆனால், பும்ரா போன்ற ஒருவருக்கு எதிராக விளையாடும் போது பவுண்டரிகளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருக்க கூடாது. ஏனென்றால் அவர் நிறைய மோசமான பந்துகளை வீசமாட்டார். இதனால் பும்ராவிற்கு எதிராக அதிரடி காட்டுவது நோக்கமாக இருக்க கூடாது.

மாறாக பும்ராவின் பந்தில் ஸ்ட்ரைக்கை சிங்கிள் ஓடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் தடுப்பாட்டத்தையும் சிறப்பாக ஆட வேண்டும். 10 வது ஓவருக்கு பிறகு நீங்கள் பும்ராவின் ஓவரில் அவுட்டாகி அங்கே இல்லை என்றால் எந்த நோக்கத்துடனும் நீங்கள் ஆட முடியாது. இதனால் அது தான் பெரிய சவாலாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இருக்கும்” என சைமன் கேடிச் தெரிவித்துள்ளார்.

சற்று முன்