- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணிக்கு ஆணவம் அதிகமாகிடுச்சு. இதெல்லாம் ரொம்ப கேலிக்குரியதா இருக்கு – கொதித்தெழுந்த ஜாம்பவான் வீரர்!

இந்திய அணிக்கு ஆணவம் அதிகமாகிடுச்சு. இதெல்லாம் ரொம்ப கேலிக்குரியதா இருக்கு – கொதித்தெழுந்த ஜாம்பவான் வீரர்!

- Advertisement-

இந்திய அணி சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்தது.  ஐபிஎல் முடித்துவிட்டு ஒரு வாரத்துக்குள் வந்து டெஸ்ட் போட்டியை விளையாடியதால் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என தோல்விகு சாக்கு போக்கு சொல்லியுள்ளார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.

ஆனாலும் இந்தியா, அணித்தேர்வில் செய்த சொதப்பல், பேட்ஸ்மேன்கள் தங்கள் தரத்துக்கு விளையாடாதது, கேப்டனாக ரோஹித் ஷர்மா அணியை சரியாக வழிநடத்தாதது என ஏகப்பட்ட குறைகளை பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கமாக இந்திய அணிக்கு முழு ஆதரவு அளிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூட இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சர் ஆண்டி ராபர்ட்ஸ் இந்திய அணி ஆணவத்தோடு விளையாடுகிறது என குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  இது குறித்த அவர் பேச்சில் “இந்திய கிரிக்கெட்டில் ஆணவம் ஊடுருவியுள்ளது, இதன் மூலம், இந்தியா மற்ற உலகின் மற்ற அணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் அல்லது வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் எது முக்கியம் என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும். டி20 கிரிக்கெட் அதன் போக்கில் இயங்கும். ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் மட்டைக்கும் பந்துக்கும் இடையில் எந்தப் ரிதமும் இல்லை.

இந்த போட்டியில் இந்தியா தனது பேட்டிங் பலத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்தேன். அஜிங்க்யா ரஹானே கடுமையாகப் போராடினாலும் இறுதிப் போட்டியில் நான் எந்த வீரரிடமும் ஒரு பிரகாசத்தைப் பார்க்கவில்லை. ஷுப்மான் கில் சில ஷாட்களை ஆடும்போது நன்றாகத் தெரிகிறார், ஆனால் அவர் லெக் ஸ்டம்பில் நின்று, பந்துவீச்சில் ஆட்டமிழக்கப்படுகிறார் அல்லது பின்னால் கேட்ச் ஆகிவிடுகிறார்.

- Advertisement-

கில் கைகளை நன்கு பயன்படுத்தி விளையாடுகிறார். ஆனால் அவர் பந்துக்கு பின்னால் வர வேண்டும். விராட் கோலி, முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க்கின் முரட்டுத்தனமாக பந்து வீச்சில் வெளியேறினார். இந்தியாவில் சில நல்ல வீரர்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே சிறப்பாக செயல்படவில்லை.

இதையும் படிக்கலாமே: மீண்டும் பிளேயராக பிராவோ மற்றும் அம்பாத்தி ராயுடு – பிரபல அணியில் குவிந்த சிஎஸ்கே வீரர்கள் – முழு விவரம்

அஸ்வினை அணியில் எடுக்காதது கேலிக்குரியது. உங்கள் சிறந்த ஸ்பின்னரை எப்படி தேர்வு செய்யாமல் இருக்கமுடியும்?. அஸ்வினை எடுக்காதது நம்ப முடியாதது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை (முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர்) தேர்வு செய்தது நல்ல முடிவுதான். ஆனால் அதில் ஒருவர் கூட உயரமானவர் இல்லை. அப்படி இருந்தாலாவது பவுன்சர்களை வீச உதவியாக இருந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்