- Advertisement 3-
Homeவிளையாட்டுபும்ரா பவுலிங், பந்த் பேட்டிங் தாண்டி.. இந்தியா ஜெயிக்க காரணமா இருந்த சிராஜ்.. எப்படி தெரியுமா..

பும்ரா பவுலிங், பந்த் பேட்டிங் தாண்டி.. இந்தியா ஜெயிக்க காரணமா இருந்த சிராஜ்.. எப்படி தெரியுமா..

- Advertisement 1-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கிரிக்கெட் போட்டியில் ஆடி முடித்து ஒரு சில தினங்கள் ஆனாலும் இன்னும் அதைப் பற்றிய கருத்துக்கள் பரவலாக சமூகவலைத் தளங்களில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி 119 ரன்கள் அடித்த போதிலும் அந்த போட்டியில் அவர்கள் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது தான்.

பாகிஸ்தான் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பலமாக இருந்த போதிலும் எளிய இலக்கை சரியாக திட்டம் போட்டு எட்ட முடியாமல் இந்தியாவின் பந்து வீச்சாளர்களுக்கு இறையானது அவர்களது இரண்டாவது தோல்விக்கும் வழிவகுத்திருந்தது. இன்னும் இரண்டு போட்டிகள் பாகிஸ்தான் அணிக்கு மீதம் இருக்கும் நிலையில் இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற சில போட்டிகளின் முடிவை பொறுத்து தான் அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையும் உருவாகியுள்ளது.

இந்த தோல்வியின் காரணமாக பாகிஸ்தான அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருவதுடன் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக அந்த அணியின் வீரர்களை மாற்றி புதிய அணியை கட்டமைக்க வேண்டும் என்பதும் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் இந்திய அணி தோல்வியின் பிடியிலிருந்து மீள காரணமாக இருந்த பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பலரையும் ரசிகர்கள் பெரிய வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணி 112 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இருந்து தடுமாறிய போது கடைசி வீரராக பேட்டிங் செய்ய வந்த சிராஜ் சிறப்பாக ஆடி ஏழு ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 119 ரன்கள் எட்டி இருந்தது.

- Advertisement 2-

ஒருவேளை அவர் வந்த வேகத்தில் ரன்கள் அடிக்காமல் அவுட்டாகி இருந்தால் பாகிஸ்தான் அணி இறுதியில் வெற்றி பெற்றிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முகமது சிராஜ் இது பற்றி சில கருத்துக்களையும் தற்போது வெளியிட்டுள்ளார். “பவுலிங் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிற்காகவும் நான் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஐபிஎல் தொடரிலும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

ஏனென்றால் கடைசி கட்டத்தில் டைலெண்ட் வீரர்கள் ரன் அடிப்பதும் ஒரு வெற்றியை தீர்மானிக்க முக்கியமானதாகும். கடைசியில் நான் அடித்த ஏழு ரன்கள் எந்த அளவுக்கு நாங்கள் வெற்றி பெற காரணம் என்பது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி என்பது மிகப்பெரிது. அதில் இலக்கு குறைவாக இருந்த சூழலில் பந்துவீச்சில் பெரிதாக எதையும் முயற்சி செய்ய வேண்டாம் என நினைத்து எப்போதும் போல எளிதாக பந்து வீசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன்” என சிராஜ் கூறினார்.

சற்று முன்