Homeகிரிக்கெட்SL vs BAN : 20 ரன் கூட எடுக்காத 7 பேர்... பயிற்சி போட்டியில்...

SL vs BAN : 20 ரன் கூட எடுக்காத 7 பேர்… பயிற்சி போட்டியில் இலங்கையை வச்சி செய்த பங்களாதேஷ்… மேட்சை முடித்துக்காட்டிய 4 பேர்… நடந்தது என்ன?

-Advertisement-

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தற்போது இந்தியா வந்தடைந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதலாவது பயிற்சி போட்டியானது இன்று கௌகாத்தி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் மெஹதி ஹாசன் மிராஸ் தலைமையிலான வங்கதேச அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. அதன்படி இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

-Advertisement-

பின்னர் தொடர்ந்து விளையாடிய அந்த அணி வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பதும் நிசங்கா 68 ரன்களையும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தனஞ்செயா டி சில்வா 55 ரன்களும் குவித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக குசல் பெரேரா 34 ரன்களும், குசல் மெண்டிஸ் 22 ரன்களும் அடித்தனர். அந்த அணியில் 7 வீரர்கள் 18 ரன்னை கூட தாண்டவில்லை.

பின்னர் 264 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியை எளிதில் இலங்கை அணி வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் மாறாக துவக்கம் முதலே அதிரடி காண்பித்த வங்கதேச அணி 42 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

-Advertisement-

இந்த போட்டியில் வங்கதேச அணி சார்பாக துவக்க வீரர்கள் தன்ஸிம் ஹசன் 84 ரன்களையும், லிட்டன் தாஸ் 61 ரன்களையும், கேப்டன் மெஹதி ஹாசன் 67 ரன்களையும், முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது இந்த உலகக் கோப்பை தொடரிலும் தாங்கள் ஒரு அபாயகரமான அணி என்று நிரூபித்துள்ளது.

இந்த போட்டியில் அந்த அணியின் முக்கிய வீரரான ஷாகிப் அல் ஹசன் களமிறங்காமலேயே அந்த அணி வெற்றி பெற்றுள்ளது அந்த அணியின் வலிமையை வெளிக்காட்டுகிறது. மேலும் மற்றும் ஒரு பயிற்சி போட்டியில் விளையாட இருக்கும் வங்கதேச அணி இந்த உலகக்கோப்பை தொடரில் தங்களது முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்