யூஎஸ் மாஸ்டர்ஸ் t20 லீக் ஆட்டங்கள் ஆகஸ்ட் 18 தொடங்கி ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆட்டங்கள் அனைத்தும் பத்து ஒவர்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஆறு ஆணிகள் பங்கேற்ற இந்த தொடரில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த தொடரின் 12வது ஆட்டத்தில் அட்லாண்டா ரைடர்ஸ் அணியும் நியூயார்க் வாரியர்ஸ் அணியும் மோதின
டாஸ் வென்ற நியூயார்க் வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய அட்லாணடா ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை குவித்தது. அதன் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ராபின் உத்தப்பா 32 ரன்களும் , ஸ்லேண்ட்ல் சிம்மோன்ஸ் 41 ரன்களும் ட்வயனே ஸ்மித் 3 ரன்களையும் எடுத்தனர். பின்னர் களமிறஙகிய வீரர்கள் அவ்வளவாக ரன்களை குவிக்கவில்லை.
பிறகு 10 ஓவரில் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிர்ணயக்கபட்ட இலக்குடன் களமிறங்கிய நியூயார்க் வாரியர்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை குவித்து அபாரமாக வென்றது. அந்த அணியின் திலகரடினே டில்ஷான் 24 ரன்களும் ஜொனாதன் கார்ட்டர் 41 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைக்க முக்கிய காரணமாக இருந்தனர்.
இதில் சிறப்பாக பந்து வீசிய நியூயார்க் வாரியர்ஸ் அணியின் சொஹைல் கான் இரண்டு ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இவரது சிறப்பான பந்துவீச்சின் மூலம் எதிரணியினர் நல்ல ஸ்டோரை எட்டாமல் இருந்த காரணத்தால் இவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள எதிரணியினர் தடுமாறினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சொஹைல் கான் எடுத்த நான்கு விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் ஸ்டம்பை பதம் பார்த்தன. இவர் ஹாமில்டன் மசகடச, ஹம்மாத் ஆசாம், க்ராண்ட் எலியாட் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் மூன்று இடது கை ஆட்டக்காரரும் ஒரு வலது கை ஆட்டக்காரர்களும் அடங்கவர்.
ஒன்பதாவது ஓவரை வீசிய சொஹைல் கான் பெரிய சாட் ஆட நினைத்த ஹாமில்டன்மசகடசவை கிளீன் போல்ட் ஆக்கினார். அதன் பிறகு ஹமீது ஆசாமம் அடுத்த பந்திலேயே அவுட் ஆனார். அதற்கடுத்த பந்தில் நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் க்ராண்ட் எல்லியாட்டையும் அவுட் செய்து சோகில் கான் ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். அதற்கடுத்த பதில் ஹர்மீத் சிங்கை ஆட்டமிழக்க செய்தார். நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள் எடுத்த சொஹைல் கானின் பந்துவீச்சு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதற்க்கு அடுத்த ஓவர் வீசிய அப்ரிடி வீசினார். அந்த ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அதில் முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் கொடுக்க, மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் அப்ரிடி . அடுத்து சூப்பர் ஓவரில் டெக்ஸாஸ் சார்ஜர்ஸ் அணி 15 ரன்கள் எடுக்க நியூயார்க் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.