சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுமையான விமர்சனங்களை இந்திய அணி மேல் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மிக மோசமாக அணித் தேர்வு செய்ததும் விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக அஸ்வினை அணியில் இடம்பெற செய்யாதது பலருக்கு கோவத்தையே உண்டாக்கியது. அதோடு களத்தில் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகளும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இதனால் ரோஹித் ஷர்மாவை ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். இந்நிலையில் ரோஹித்துக்கு ஆதரவாக பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளது ரசிகர்களை மேலும் கோபமாக்கியுள்ளது.
ரோஹித் பற்றி பேசிய கங்குலி “எனக்கு ரோஹித் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவரும் எம்எஸ் தோனியும் மட்டும்தான் 5 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளனர். ஐபிஎல் கோப்பையை வெல்வது எளிதானது அல்ல. உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல்லை வெல்வது கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளுக்குப் பிறகுதான் நீங்கள் பிளேஆஃப்களில் விளையாடலாம். உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு 4-5 போட்டிகள் மட்டுமே தேவை. ஐபிஎல்லில், நீங்கள் சாம்பியன் ஆவதற்கு 17 போட்டிகள் தேவை,” என்று பேசினார்.
ரோஹித் ஷர்மா இந்தியா கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது பிசிசிஐ தலைவராக கங்குலிதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிவிட்டர் வாசி ஒருவர் கங்குலியின் இந்த கருத்தை கலாய்த்து “ரோஹித் ஷர்மாவின் மக்கள் தொடர்பாளர் போல கங்குலி பேசுகிறார். அவருக்கு எதிரான விமர்சனங்களில் இருந்து அவரைக் காப்பாற்ற பார்க்கிறார்” எனக் கூறியுள்ளார்.
மற்றொரு டிவிட்டர் பயனர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, உலகக் கோப்பையை வெல்வதை விட இந்தியன் பிரீமியர் லீக்கை வெல்வது கடினமானது என்று கூறுகிறார். ஐபிஎல்லில் நீங்கள் ஸ்டார்க், ஷாகீன் அப்ரிடி போன்ற தரமான பவுலர்களை எதிர்கொள்வது இல்லை…