- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி தான் ஓப்பனிங்.. அவரு அப்படி செஞ்சத மட்டும் மறந்துடாதீங்க.. நம்பிக்கையில் கங்குலி

கோலி தான் ஓப்பனிங்.. அவரு அப்படி செஞ்சத மட்டும் மறந்துடாதீங்க.. நம்பிக்கையில் கங்குலி

- Advertisement 1-

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில் திடீரென ஏதாவது மாற்றங்களை செய்யுமா அல்லது அதே அணியுடன் ஆடுமா என்பதை நிச்சயம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே வேளையில் ரசிகர்கள் விருப்பப்படும் விஷயங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து தான் வருகின்றனர்.

ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் விரும்ப, மற்றொரு முக்கியமான விஷயமாக இருந்து வருவது ஷிவம் துபேவின் இடம். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது ஜெய்ஸ்வாலுக்கு இறுதி போட்டியில் வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.

அதே போல, ரசிகர்கள் மாற வேண்டுமென நினைக்கும் மற்றொரு விஷயம் கோலியின் பேட்டிங் ஆர்டர் தான். தொடக்க வீரராக 7 போட்டிகளில் ஆடியிருந்த அவர், 75 ரன்கள் மட்டுமே எடுக்க எந்த போட்டியிலும் 40 ரன்களை அவர் தொடவே இல்லை. தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் மூன்றாவது வீரராக தான் பல்வேறு சாதனைகளை தன்வசம் ஆக்கியுள்ள கோலியால் தொடக்க வீரராக இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியிலும் ஜொலிக்க முடியவில்லை.

அவரைவிட ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர், சிறந்த ரன் குவிப்பில் ஈடுபட ரோஹித்தும் தனது பேட்டிங் மூலம் அதற்கு பக்கபலமாக இருந்து வருகிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பல ஐசிசி தொடர்களில் பட்டையை கிளப்பி இருந்த விராட் கோலியால் டி20 தொடரில் தடுமாறி வருவதை பார்க்க ரசிகர்களுக்கு வருத்தமாக தான் உள்ளது.

- Advertisement 2-

இதனால் இறுதி போட்டியில் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக களமிறக்க வைத்துவிட்டு விராட் கோலி மீண்டும் 3 வது வீரராக களமிறங்கினால் நிறைய ரன்களை குவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவதை தொடர வேண்டும். ஏழு மாதங்களுக்கு முன்பு தான் உலக கோப்பை தொடரில் 700 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஒரு மனிதன் தான். சில நேரம் இது போன்று தோல்விகளும் அரங்கேறும். அதனை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

கோலி, டெண்டுல்கர், டிராவிட் ஆகியோர் இந்திய கிரிக்கெட்டின் பல்கலைக்கழகங்களாக இருக்கும் நிலையில், 3, 4 போட்டிகளில் அவர்கள் சிறப்பாக ஆடவில்லை என்பது பலவீனமாக வீரர்களாக மாற்றி விடாது. எனவே ஃபைனலில் அவரை கண்டுகொள்ள வேண்டாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என கங்குலி கூறியுள்ளார்.

சற்று முன்