Homeகிரிக்கெட்தென்னாப்பிரிக்காவை சம்பவம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.. நாங்க வந்த நோக்கமே வேற.. நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் ஸ்பீச்

தென்னாப்பிரிக்காவை சம்பவம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.. நாங்க வந்த நோக்கமே வேற.. நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் ஸ்பீச்

-Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து சிறிய அணிகள் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. இங்கிலந்து அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சம்பவம் செய்தது போல், தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி மிரள வைத்துள்ளது. இதன் மூலம் நெதர்லாந்து அணி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணி சார்பாக கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்களும், வான் டர் மெர்வ் 29 ரன்களும், ஆர்யன் தத் 23 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் இங்கிடி, யான்சன் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

-Advertisement-

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களுக்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை மட்டுமே நெதர்லாந்து வீழ்த்தியிருந்த நிலையில், முதல்முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு பற்றி ஸ்காட் எட்வர்ட்ஸ் பேசும் போது, கடந்த இரு போட்டிகளில் எங்களின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆட்டம் முடிவதற்கு முன்பாகவே பெவிலியன் திரும்பினர். அதனால் இன்றைய ஆட்டத்தில் கடைசி வரை விளையாட நினைத்தேன். வென் டர் மெர்வுடன் விளையாடுவது ஜாலியாக இருக்கும். நாம் எதிர்பார்க்காத இடத்தில் ரன்கள் அடிப்பார். அதனை பார்க்கவே நன்றாக இருக்கும்.

-Advertisement-

ஆர்யன் தத்தால் சிறப்பாக பவுண்டரி விளாட முடிந்தது. ஒரு அணியாக எங்களுக்கு பெருமையாக உள்ளது. நாங்கள் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற ஆசையில் தான் பங்கேற்றுள்ளோம். அதற்கு பெரிய அணிகளை வீழ்த்த வேண்டும். தென்னாப்பிரிக்கா எங்களுக்கு மிகவும் பிடித்த அணியாகும். அவர்களை வீழ்த்தி எங்களின் வெற்றிக் கணக்கை தொடங்கியது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வெற்றியின் மூலமாக நெதர்லாந்து அணி உலகக்கோப்பை தொடரில் 2 புள்ளிகள் எடுத்து கணக்கை தொடங்கியுள்ளது. இதனால் நெதர்லாந்து அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதலாக அமைந்துள்ளது.

-Advertisement-

சற்று முன்