- Advertisement -
Homeவிளையாட்டுஜெய்க்கிறோமோ, தோற்கிறோமோ.. முதலில் சண்டை செய்யனும்.. தென்னாப்பிரிக்காவுக்கு தண்ணி காட்டிய மஹ்மதுல்லா.. நாகினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

ஜெய்க்கிறோமோ, தோற்கிறோமோ.. முதலில் சண்டை செய்யனும்.. தென்னாப்பிரிக்காவுக்கு தண்ணி காட்டிய மஹ்மதுல்லா.. நாகினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

- Advertisement-

உலகக்கோப்பை தொடரில் இன்று மும்பையில் தொடங்கிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வங்கதேச அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய டி காக் – ஹென்ரிக்ஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஹென்ரிக்ஸ் 12 ரன்களிலும், தொடர்ந்து வந்த வான் டர் டூஸன் 1 ரன்னிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் டி காக் – மார்க்ரம் கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடியது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்து அதிரடிக்கு திரும்பினர். மார்க்ரம் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், டி காக் 101 பந்துகளில் சதம் விளாசி அசத்தினர். இந்த உலகக்கோப்பை தொடரில் டி காக் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். இதன்பின்னர் டி காக் அதிரடியாக ரன்கள் குவிக்க, கிளாஸன் சிக்சர்களாக வெளுத்து கட்டினார்.

டி காக் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 140 பந்துகளில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கிளாஸன் 49 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களை குவித்தது.

இதன்பின் வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் – ஹசன் கூட்டணி களமிறங்கியது. நிதானமாக தொடங்கிய இருவரும் 6 ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தனர். அப்போது 7வது ஓவரை வீசிய யான்சன் பந்துவீச்சில் ஹசன் 12 ரன்களிலும், ஷான்டோ டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் ஷகிப் 1 ரன்னிலும், முஷ்ஃபிகுர் ரஹிம் 8 ரன்களிலும், லிட்டன்ஸ் தாஸ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement-

இதனால் வங்கதேச அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த மெஹதி ஹசன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நின்றிருந்த மஹ்மதுல்லா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். பெரும்பாலும் டெய்லண்டர்களிடம் ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் மஹ்மதுல்லா ஸ்ட்ரைக்கை தக்க வைத்து கொண்டார். இதனால் வங்கதேச அணியை ஆல் அவுட் செய்ய முடியாமல் தென்னாப்பிரிக்கா பவுலர்கள் திணறினர்.

சிறப்பாக ஆடிய மஹ்மதுல்லா 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக வங்கதேச அணி 200 ரன்களையும் கடந்தது. சிறப்பாக ஆடிய மஹ்மதுல்லா 111 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, வங்கதேச அணி 46.4 ஓவர்களில் 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

சற்று முன்