Homeகிரிக்கெட்20 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி.. சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா.. நியூசிலாந்து அணிக்கு மரண அடி

20 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி.. சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா.. நியூசிலாந்து அணிக்கு மரண அடி

-Advertisement-

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு பவுமா – டி காக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 38 ரன்கள் சேர்த்த நிலையில், பவுமா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் இணைந்த டி காக் – வான் டர் டசன் இருவரும் 2வது விக்கெட்ட்7உக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய டி காக் 114 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை தொடரில் டி காக் அடிக்கும் 4வது சதமாகும்.

-Advertisement-

அதேபோல் சிறப்பாக ஆடிய வான் டர் டஸன் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதேபோல் மில்லர் 30 பந்துகளில் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 358 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் கான்வே – யங் கூட்டணி களமிறங்கியது.

இதில் கான்வே 3வது ஓவரிலேயே 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ட்ந்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் யங்கும் 33 ரன்களில் வெளியேற 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது. இதனால் நியூசிலாந்து அணியை மீட்கும் பொறுப்பு அனுபவ வீரர்களான மிட்செல் – டாம் லேதம் கைகளுக்கு வந்தது.

-Advertisement-

ஆனால் லேதம் 4 ரன்களிலும், மிட்செல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 109 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஒருபக்கம் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக சில பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி தள்ளினார். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. ஆனால் அவரும் கடைசியாக 60 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளையும், கொயட்சே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.

-Advertisement-

சற்று முன்