- Advertisement 3-
Homeவிளையாட்டுவந்த வேகத்தில் டாடா சொன்ன ஆப்கானிஸ்தான்.. ஐசிசி தொடரில் தென்னாபிரிக்க அணி செஞ்ச அபார சாதனை..

வந்த வேகத்தில் டாடா சொன்ன ஆப்கானிஸ்தான்.. ஐசிசி தொடரில் தென்னாபிரிக்க அணி செஞ்ச அபார சாதனை..

- Advertisement 1-

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி 20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி போட்டிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளது. முன்னதாக சூப்பர் 8 சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் இருந்ததாக முதலில் தெரிந்தது.

ஆனால் போட்டிகள் செல்ல செல்ல எதிர்பாராத முடிவு கிடைத்ததுடன் யாரும் நினைத்து கூட பார்க்காத ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய அவர்கள், வங்காளதேச அணிக்கும் அதிர்ச்சி கொடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்காவும் அரையிறுதிக்கு தகுதி பெற, இந்த இரண்டு அணிகளும் முதல் அரையிறுதி போட்டியில் மோதி இருந்தது.

இதுவரை ஒரு முறை கூட ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் இந்த இரண்டு அணிகள் ஆடியது கிடையாது. அதிலும் தென்னாபிரிக்க அணிக்கு அரையிறுதி என்றாலே அலர்ஜி போல இருக்க, முதல் முறையாக அவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்களா என்பதில் தான் அனைவரது பார்வையும் இருந்து வந்தது. இன்னொரு பக்கம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி.

இதனால், அவர்கள் நிச்சயம் தெனாப்பிரிக்க அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரையிறுதியில் அப்படியே நேர்மாறான விஷயம் தான் அரங்கேறி இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். அதன்படி ஆடிய அவர்களால் எந்தவித தாக்கத்தையும் தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களை எதிர்த்து செய்ய முடியாமல் போனது.

- Advertisement 2-

அஸ்மர்துல்லா மட்டும் 10 ரன்கள் எடுக்க, மற்ற எந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னைத் தாண்டவில்லை. தென்னாபிரிக்க அணி தரப்பில் மார்கோ யான்சென் மற்றும் ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் நோர்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, 12 வது ஓவரில் ஆல் அவுட்டான ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. டி 20 உலக கோப்பையின் அரையிறுதி போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய தென்னாபிரிக்க அணியும் 5 ரன்களில் இருந்த போது டி காக் விக்கெட்டை இழந்திருந்தது. எளிய இலக்கு என்பதால் நிதானமான ஆட்டத்தை கையில் எடுத்த தென்னாபிரிக்க அணி, 9 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று அசத்தி உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்று, தென்னாபிரிக்க அணியை ஜூன் 29 ஆம் தேதியன்று டி 20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்