- Advertisement 3-
Homeவிளையாட்டுஎன்னது ஷிவம் துபேக்கு இடமில்லையா.. ப்ளேயிங் லெவனில் ரோஹித் எடுக்க போகும் முக்கியமான முடிவு..

என்னது ஷிவம் துபேக்கு இடமில்லையா.. ப்ளேயிங் லெவனில் ரோஹித் எடுக்க போகும் முக்கியமான முடிவு..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களின் முதல் போட்டியை அயர்லாந்துக்கு எதிராக ஆட உள்ள நிலையில் இதில் சில விஷயங்களை எதிர்பார்த்து ரசிகர்களும் பெரும் ஆவலில் இருந்து வருகின்றனர். இந்திய அணி ஆடும் லெவனை தேர்வு செய்வதற்கு நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால் லீக் போட்டிகளில் எந்த மாதிரி தனது அணியை ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் வடிவமைப்பார்கள் என்பதும் மிகப் பெரிய ட்விஸ்டாகவே இருந்து வருகிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஜெய்ஸ்வால் ஆடாத சூழலில் அவர் லீக் போட்டியில் இடம் பெறுவாரா என்ற ஒரு கேள்வி உள்ளது. அதே போல ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் என டி 20 உலக கோப்பைத் தொடரில் புதிதாக இடம்பெற்றவர்களும் பயிற்சி போட்டியில் நன்றாக சோபிக்காமல் போயினர். இதனால், முக்கியமான போட்டிகளில் அவர்கள் இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருக்க இவர்களுக்கான வாய்ப்பும், ஆல் ரவுண்டர்களில் யார் ஆடுவார்கள் என்பது பற்றியான பல விஷயங்களும் மர்மமாகவே உள்ளது. அதே வேளையில் எதிரணியை பொறுத்து தனது அணியை தேர்வு செய்வாரென ரோஹித் ஷர்மா ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் அணியில் சேர்த்ததன் பயன் அமெரிக்காவில் தெரியும் என்றும் ரோஹித் கூறி இருந்தார். இதனால், இந்திய அணி வீரர்களை போட்டிக்கேற்ப ஆடும் லெவனில் தேர்வு செய்து கொள்ள நிறைய சாதகமான விஷயங்களும் உள்ளது.

- Advertisement 2-

இதனிடையே பலரும் இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து நிறைய விஷயங்களை தெரிவித்து வர இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் தற்போது சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “என்னை பொருத்தவரையில் இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெயிஸ்வால் களமிறங்க வேண்டும்.

கோலி மூன்றாவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இறங்க வேண்டும். ஏழாவது இடத்தில் ரவிந்திர ஜடேஜா ஆட வேண்டும். இதன் பின்னர் நான்கு பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் ஷிவம் துபே அனைத்து போட்டிகளிலும் ஆடினால் நிச்சயம் சிக்ஸர்களை அடித்து குறைந்த பந்துகளில் ரன் ரேட்டை உயர்த்தி விடுவார் என தெரிவித்து வரும் நிலையில் அவர் அணியில் இருக்க வேண்டாம் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்