இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக விளையாடிய போது முன்னாள் கேப்டனான தோனியுடன் நிறைய நேரம் செலவிட்டுள்ளார். தனது கரியரின் ஆரம்பத்தில் இருந்தே தோனியுடன் இணைந்து விளையாடியுள்ள அவர் தோனி கேப்டனாக இருந்தபோது 2007-ஆம் ஆண்டு டி20 உலககோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
சமீபமாகவே தோனி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வரும் வேளையில் பிரபல தனியார் youtube சேனலில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஸ்ரீசாந்த் தோனியுடன் இருந்த நட்பு குறித்தும் அவருடன் இருந்த நினைவு குறித்தும் சில வெளிவராத தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் 2005-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு கொச்சியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை ஸ்ரீகாந்த் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ஸ்ரீசாந்த் கூறியதாவது : கேரளாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன் வலைப்பயிற்சியில் பந்துவீச என்னை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் ரைட் அழைத்தார்.
அந்த போட்டி கொச்சியில் நடைபெற்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதனால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அதோடு அனைவரும் சச்சின் சச்சின் என்று கோஷமிட்டு கொண்டிருந்தனர். நாங்கள் அப்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை. சப்போர்ட் பிலேயர்களாக இருந்த காலம் அது. அப்போது தோனி பாய் என்னிடம் வந்து பேசுகையில் : நான் என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன். இப்பொழுது என்னை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் நான் எப்படி என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்று கூறினார்.
மேலும் கேரளாவை சேர்ந்த மற்றொரு வீரரும் எங்களுடன் அப்போது இருந்தார். நாங்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, நான் தோனியை பார்த்து, தோனி பாய், நிச்சயம் நாமும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் இந்திய அணிக்காக விளையாடுவோம் என்று கூறினேன். அப்போது அவர் புன்னகையுடன் ஆம் நிச்சயமாக நாம் இந்தியாவுக்காக விளையாடுவோம் அதுவரை நாம் கடினமாக உழைப்போம் என்று கூறினார்.
அதேபோன்று 2003-04 ஆம் ஆண்டுகளில் துலீப் டிராபி தொடரில் விளையாடும் போது : நிச்சயம் நீ இந்திய அணிக்காக விளையாடுவாய் கவலைப்படாதே. தொடர்ச்சியாக உன்னுடைய பந்துவீச்சில் கவனம் செலுத்து என்று என்னிடம் அவர் கூறிக் கொண்டிருந்தார். அதேபோன்று அந்த துலீப் டிராபி இறுதிப் போட்டியிலும் அவர் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதோடு இந்திய ஏ அணிக்காகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கண்டார். 2003-04 ஆம் நான்காம் ஆண்டுகளில் ஆரம்பித்த அவருடைய பயணம் மிகச் சிறப்பாக இருந்தது என ஸ்ரீசாந்த் கூறினார்.