- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலிக்கு நான் எதுக்கு வாழ்த்து சொல்லணும்.. நக்கல் சிரிப்பு.. இலங்கை வீரரின் செயலால் எழுந்த சர்ச்சை...

கோலிக்கு நான் எதுக்கு வாழ்த்து சொல்லணும்.. நக்கல் சிரிப்பு.. இலங்கை வீரரின் செயலால் எழுந்த சர்ச்சை…

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலி நேற்று (நவம்பர் 5) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 49-வது சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 277-வது இன்னிங்ஸ்-இல் விராட் கோலி இந்த சாதனையை படைத்திருக்கிறார். சச்சின் சாதனையை சமன் செய்த நிலையில், விராட் கோலி தனது 50-வது சதத்தை அடிப்பதற்காக அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

34 உலகக் கோப்பை போட்டிகளில் விராட் கோலி இதுவரை 1573 ரன்களை குவித்து இருக்கிறார். இதில் நான்கு சதங்கள், 10 அரைசதங்கள் என்று இவரின் சராசரி 58.25 ஆகும். இவைகளில் அதிகபட்சமாக 107 ரன்களை குவித்து இருக்கிறார். உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2278 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியா விளையாடி இருக்கும் 8 போட்டிகளில் விராட் கோலி 542 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 108.40 ஆகும். இதில் இரண்டு சதங்கள், நான்கு அரைசதங்கள் அடங்கும். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 103 ரன்களை குவித்துள்ளார். அந்த வகையில், இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

- Advertisement 2-

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல் எட்டிய விராட் கோலிக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் கோலியின் 49-வது சதம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

வங்காளதேசம் அணிக்கு எதிரான போட்டியை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்தார் குசல் மெண்டிஸ். அப்போது செய்தியாளர் ஒருவர், விராட் கோலியின் 49-வது சர்வதேச சதத்திற்கு வாழ்த்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த குசல் மெண்டிஸ், “நான் ஏன் அவரை வாழ்த்த வேண்டும்?” என்று கேட்டு, உடனே நக்கலாக சிரித்தார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சற்று முன்