- Advertisement -
Homeவிளையாட்டுகோலிக்கு நடந்தது தான் பாண்டியாவுக்கு நடந்துருக்கணும்.. பாவம் பண்ணிட்டாங்க.. கம்பீர் பிழையை உடைத்த ஸ்ரீகாந்த்..

கோலிக்கு நடந்தது தான் பாண்டியாவுக்கு நடந்துருக்கணும்.. பாவம் பண்ணிட்டாங்க.. கம்பீர் பிழையை உடைத்த ஸ்ரீகாந்த்..

- Advertisement-

இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்து தான் கடந்த ஒரு நாளாக நிறைய விவாதங்கள் அரங்கேறி வருகிறது. கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட, அஜித் அகர்கர் தேர்வுக் குழு தலைவராக உள்ளார்.

இவர்களின் திட்டப்படி நிறைய மாற்றங்கள் இந்தியாவின் டி20 மற்றும் ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ளது ஒரு பக்கம் ஆதரவையும், இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் நிறைய சம்பாதித்துள்ளது. டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல, சுப்மன் கில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை விட சிறந்த பேட்டிங்கை டி20 போட்டிகளில் வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் ருத்துராஜிற்கு இரண்டு வடிவிலான போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவரை விட கில், ரியான் பராக் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும் அதிக விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இதே போல, ஹர்திக் பாண்டியாவை மாற்றி விட்டு டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்ததும் தேவை இல்லாத ஒன்று என நிறைய பேர் குறிப்பிட்டு வருகின்றனர். இப்படி கம்பீர் பயிற்சியாளராக காலடி எடுத்து வைக்கப் போகும் முதல் தொடரிலேயே பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement-

இதனிடடையே, இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் குறித்து தெரிவித்த கருத்து, கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. “ஒரு மாதத்திற்கு முன்பாக தான் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றிருந்தது. அப்படி இருக்கும் போது அதில் துணை கேப்டனாக இருந்தது ஹர்திக் பாண்டியா.

இதனால், வழக்கமாக அவர் தான் தற்போது கேப்டனாக மாறியிருக்க வேண்டும். சூர்யகுமார் எனக்கு பிடித்தமான வீரர் தான். இதில் நியாயத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்படி இருக்கும் போது பாண்டியாவை டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக நியமித்திருக்க கூடாது. மேலும் தற்போது சுப்மன் கில்லை புதிய துணை கேப்டனாக அறிவித்துள்ளார்கள்.

என்னை கேட்டால் டி20 இந்திய அணியிலேயே அவர் இருந்துருக்கக் கூடாது. தோனி கேப்டனாக இருந்த போது கோலி துணை கேப்டனாக இருந்தார். இப்படி வரிசையாக தோனி, கோலி, ரோஹித் என கேப்டன் பதவி மாறியது. அதே போல தான் ஹர்திக் பாண்டியாவிற்கும் நடந்திருக்க வேண்டும். டி20 உலக கோப்பைத் தொடரில் ஒரு ஆல் ரவுண்டராக ஜொலித்து இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றி இருந்தார்” என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.

சற்று முன்