- Advertisement -
Homeவிளையாட்டுஎன் பேட்டிங்கே வேதனையா இருக்கு.. அதுல ஒரு டீமா அப்டேட் பண்ணிக்கணும்.. இலங்கை கேப்டன் அசலங்கா..

என் பேட்டிங்கே வேதனையா இருக்கு.. அதுல ஒரு டீமா அப்டேட் பண்ணிக்கணும்.. இலங்கை கேப்டன் அசலங்கா..

- Advertisement-

இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி டி20 தொடரில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர்கள் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளனர். இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சு மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டாலும் பேட்டிங்கில் அவர்கள் காட்டிய அதிரடி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்று தான் எதிர்பார்த்தனர்.

ஆனால் முதல் மூன்று வீரர்களை தவிர எந்த வீரர்களும் பேட்டிங்கில் கவனம் செலுத்தாததால் இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமல் போனது. முதல் டி20 போட்டியில் 214 ரன்களை நோக்கி ஆடியிருந்த இலங்கை அணி, மிகச் சிறப்பாக ஆடி வெற்றியை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருந்தது.

ஆனால் நடுவே சில விக்கெட்டுகள் விழ அவர்களால் மீள முடியாமல் போய் 170 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். இதேபோல இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியால் கடைசி ஓவர்களில் ரன் சேர்க்க முடியாமல் போனது. 161 ரன்கள் மட்டுமே அவர்கள் எடுக்க மழை வேறு இந்திய அணி பேட்டிங்கை ஆரம்பித்ததும் குறுக்கிட்டது.

இதனால், இந்திய அணிக்கு 8 ஓவர்களில் 78 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையும் உருவாகி இருந்தது. இதனை இந்திய அணி எந்த நெருக்கடியும் இன்றி 7 வது ஓவரில் எட்டிப் பிடிக்க அவர்கள் தற்போது தொடரையும் கைப்பற்றி உள்ளனர்.

- Advertisement-

இதனிடையே தொடரை இழந்த விரக்தியில் பேசி இருந்த ஸ்ரீலங்கா அணியின் கேப்டன் அஸலங்கா, “நாங்கள் கடைசி கட்ட ஓவர்களில் பேட்டிங் செய்த விதமும், மிடில் ஆர்டரில் நான் உட்பட அனைவரும் பேட்டிங் செய்ததும் வேதனையை கொடுக்கிறது. நாங்கள் எங்களின் பேட்டிங்கை இன்னும் நிறைய மேம்படுத்த வேண்டி உள்ளது.

இந்த பிட்ச்சில் பந்து பழையதாக மாறும் போது பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும். ஆனால், ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரர்களால் நாங்கள் நன்றாக ஆட வேண்டும். நாங்கள் 15 முதல் 18 ரன்கள் குறைவாக எடுத்தோம். மேலும் மழையும் இந்த போட்டியில் விளையாடி விட்டது. அதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. மழைக்கு நடுவே 8 ஓவர் என வரும் போது இலக்கை எட்டுவது எளிதாக இருக்கும்” என அசலங்கா கூறி உள்ளார்.

சற்று முன்