ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4 போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால், ஆட்டம் 45 ஓவர்களாக கொண்ட போட்டியாக நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதன்பின் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அப்போது மீண்டும் மழை குறுக்கிய, ஆட்டம் 42ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் அதிரடியாக விளையாட, அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் டிஎல்எஸ் விதிப்படி இலங்கை அணி வெற்றிபெற 252 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்பின் களமிறங்கிய இலங்கை அணியில் குசல் பெரேரா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் நிஷாங்கா – குசல் மெண்டிஸ் இணை கூட்டணி சேர்ந்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த இருவரும் ரன் ரேட்டை 6லேயே வைத்திருந்தனர். நிஷாங்கா 29 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சமரவிக்ரமா குசல் மெண்டிஸ்-க்கு சிறந்த கம்பெனியை கொடுத்தார்.
இருவரும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். இதனால் பாகிஸ்தான் பவுலர்கள் நம்பிக்கையை இழந்தனர். சிறப்பாக ஆடிய குசல் மெண்டிஸ் அரைசதம் கடக்க, இன்னொரு பக்கம் சமரவிக்ரமா ஒவ்வொரு ரன்னாக சேர்த்தார். ஆனால் 29.4வது பந்தில் பவுண்டரி விளாச ஆசைப்பட்டு 48 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அசலங்கா களமிறங்கினார்.
177 ரஞ்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், இலங்கை அணியின் ரன்குவிப்பில் எந்த குறைச்சலும் ஏற்படவில்லை. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குசல் மெண்டிஸ் 87 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ஷனகா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது பந்துவீசிய ஷாகின் அப்ரிடி தனஞ்செயா டி சில்வா மற்றும் வெல்லாலகே இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் 4 ரன்கள் சேர்க்கப்பட்டதால், கடைசி ஓவரில் இலங்கை வெற்றிபெற 8 ரன்கள் தேவையாக இருந்தது. அதில் முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, 5வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. கடைசி பந்தில் இலங்கை வெற்றிபெற 2 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த பந்தை பாகிஸ்தான் அணியின் ஜமான் கான் வீச, அதனை எளிதாக தட்டிவிட்டு அசலங்கா 2 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்தது.