- Advertisement -
Homeவிளையாட்டு12 பாலில் 4 விக்கெட்.. பாகிஸ்தான் வீரர்களை பந்தாடிய ஸ்ரீசாந்த்... 40 வயதிலும் அசராமல் அதிரடி...

12 பாலில் 4 விக்கெட்.. பாகிஸ்தான் வீரர்களை பந்தாடிய ஸ்ரீசாந்த்… 40 வயதிலும் அசராமல் அதிரடி ஆட்டம்

- Advertisement-

கிரிக்கெட் உலகம் டெஸ்ட், ஒன் டே, டி20 மட்டுமில்லாமல் பல புது விதமான ஆட்டமுறைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தி அண்ட்ரட் போட்டி, யு.எஸ். மாஸ்டர்ஸ் T10 லீக் போட்டி போன்றவை நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களும் தங்கள் நேரம் இதன் மூலம் சேமிக்க படுவதாக கூறுகின்றனர்.

அந்த வகையில் தற்போது T10 லீக் ஆனது அமெரிக்காவின் லாடர்ஹில்லில் ஆகஸ்ட் 18 முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 25 ஆட்டங்கள் கொண்ட இந்த லீக் தொடரானது ஆகஸ்ட் 27 வரை நடைபெற உள்ளது. இந்த லீக்கில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த வருடம் தான் இந்த லீக் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கு பெறுவது இந்த லீக்கின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அட்லாண்டா ரைடர்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பாவும், கலிபோர்னியா நைட் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும், மோரிஸ் வில்லி யூனிட்டி அணிக்கு ஹர்பஜன் சிங்கும், நியூ ஜெர்சி ட்ரைடென்ஸ் அணிக்கு கௌதம் கம்பீரும், நியூயார்க் வாரியர்ஸ் அணிக்கு மிஸ்பா உல் ஹக்கும், டெக்சாஸ் சார்ஜர்ஸ் அணிக்கு பென் டன்க்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டெக்சாஸ் சார்ஜர்ஸ் அணிக்கும் மோரிஸ் வில்லி யூனிட்டி அணிக்கும் இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மோரிஸ் வில்லி யூனிட்டி அணி டெக்சாஸ் சார்ஜர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங்கின் மோரிஸ் வில்லி யூனிட்டி அணிக்காக விளையாடிய முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்த் 4 விக்கெட்டுகளை விழுத்தி அசத்தினார்.

- Advertisement-

அவரது ஒவ்வொரு பந்தும் புயல் போல எதிர் அணியை திக்கு முக்காட செய்தது. இவர் 12 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழுத்தி பார்பவர்களை ப்ரமிக்கவைத்தார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல் ரவுண்டருமான முகமது ஹபீஸ், முக்தார் அகமது, இலங்கை அணியின் முன்னாள் தொடக்க வீரர் உபூல் தரங்கா மற்றும் டேரன் ஸ்டீவன்ஸ் ஆகிய முக்கியமான நான்கு விக்கெட்டுகளை அவர் விழுத்தி அசத்தினார்.

அவரின் இந்த வீடியோவானது தற்போது நிறைய நபர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இவர் சிறப்பாக பந்துவீசிய போதும் அவரது அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க தவறினார்கள். டெக்சாஸ் சார்ஜர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோரிஸ்வில் யூனிட்டி அணி 10 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தனர்.

சற்று முன்