- Advertisement 3-
Homeவிளையாட்டுஜடேஜா கண்டிப்பா சூப்பர் 8 ஆடணும்.. அவர மாத்தாம இந்த பையனுக்கும் வாய்ப்பு கொடுங்க.. சிஎஸ்கே...

ஜடேஜா கண்டிப்பா சூப்பர் 8 ஆடணும்.. அவர மாத்தாம இந்த பையனுக்கும் வாய்ப்பு கொடுங்க.. சிஎஸ்கே கோச் கொடுத்த ஐடியா..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற்றம் கண்டிருந்தாலும் அந்த அணிகளில் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஏராளமான விஷயங்கள் குழப்பமாகவே உள்ளது. நியூயார்க் மைதானம் சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டுக்கும் சாதகம் இல்லாமல் போனதால் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஜடேஜா, அக்சர் படேல், விராட் கோலி, ரோஹித் ஷர்மா என பலரும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டனர்.

இதில் ஜடேஜா ரன் அடிக்காமல், விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல், கேட்ச் கூட எடுக்காமல் இருப்பது பெரிய அளவில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது. இதனால் இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் வைத்து போட்டிகள் நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பை கொடுத்து பேட்டிங்கை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

அதே போல வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் சுழற்பந்து வீச்சு சூப்பராக எடுபடும் என்பதால், அதில் ஃபார்மில் வராமல் துடிக்கும் ஜடேஜாவை மாற்றி விட்டு இதுவரைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் குல்தீப் யாதவை அணியில் மாற்றாக பயன்படுத்தலாம் என்பதும் ரசிகர்களின் விருப்பம். அப்படி இருக்கையில் முன்னாள் நியூசிலாந்து வீரரும், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெம்மிங் இந்திய அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கிச் செல்லும்போது நிச்சயம் பிட்ச் அதிக பழக்கப்பட்டிருக்கும் என்பதால் அங்கே குல்தீப் யாதவ் விக்கெட்டுகள் எடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் அணியை செட் செய்து விட்டோம் என்று நினைத்து சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அணியில் உள்ள சாதகத்தை மாற்றாமல் அதனை தவற விட்டுவிடக் கூடாது.

- Advertisement 2-

சிஎஸ்கே அணியில் ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர் ஒரே மாதிரி பந்துவீசி வருவதால் அவர்களை தேர்வு செய்வதில் கடினமாக இருக்கும். ஆனால் அவர்களின் திறமை ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு விதங்களில் பந்து வீசி வருவார்கள். இதனால் அக்சர் படேலுக்கு முன்பாக பேட்டிங் செய்யும் திறனையும் அதிகம் கொண்டிருக்கும் ஜடேஜாவை இந்திய அணி பயன்படுத்த வேண்டும். தனக்கான சூழல் வரும்போது எதிரணி வீரர்களுக்கு ஜடேஜா மிக ஆபத்தான வீரராகவும் இருப்பார்.

அதனை கடந்த பல வருடங்களாகவும் நாம் பார்த்து வருகிறோம். அதேபோல தற்போது இருக்கும் இந்திய அணி நிச்சயம் இறுதிப் போட்டிக்கு ஆட தகுதி உள்ள அணி. அதில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நியூயார்க்கில் செயல்படாமல் போன சுழற் பந்து நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் மிகப்பெரிய பங்கு வகிக்கும்” என பிளெம்மிங் கூறியுள்ளார்.

சற்று முன்