- Advertisement -
Homeவிளையாட்டுமுதல் பந்துலயே பும்ராகிட்ட நான் அவுட்டானது இதுனால தான்.. ஸ்மித்தே பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி..

முதல் பந்துலயே பும்ராகிட்ட நான் அவுட்டானது இதுனால தான்.. ஸ்மித்தே பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி..

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி முடிந்து பல நாட்களானாலும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நடந்த சில சம்பவங்களை நிச்சயம் எளிதில் கடந்து விட முடியாது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட்டான சமயத்தில் அந்தப் போட்டியில் அவர்கள் தோல்வி அடைந்தது போல ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்து விட்டனர்.

ஆனால் பும்ரா தலைமையிலான வேகப்பந்து வீச்சு யூனிட், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தது. வெறும் 104 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவை சுருட்டியிருந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் செய்த தவறுகளை திருத்திக் கொண்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்ததால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களையும் அசால்டாக எதிர்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கடின இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, அதிக ரன் சேர்க்க முடியாமல் போக அவர்கள் பரிதாபமாக சொந்த மண்ணிலேயே தோல்வி அடைந்திருந்தனர். பும்ரா இரண்டு இன்னிங்சிலும் விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றிருந்த நிலையில், முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித்தை கோல்டன் டக் முறையில் அவுட் செய்திருந்தார்.

டெஸ்ட் அரங்கிலேயே டேல் ஸ்டெயினுக்கு பிறகு ஸ்மித்தை கோல்டன் டக் முறையில் அவுட் செய்திருந்த பெருமையை பும்ரா பெற்றிருந்தார். இதனிடையே பும்ராவின் பந்து வீச்சு குறித்து சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “பும்ரா பந்துவீச ஓடி வரும்போது வித்தியாசமாக வருகிறார். மேலும் மற்ற எந்த பந்து வீச்சாளர்களிடமும் இல்லாத வித்தியாசமும் அவரிடம் உள்ளது. அதே நேரத்தில் பந்தை அவர் ரிலீஸ் செய்யும் போது அதிலும் ஒரு வித்தியாசத்தை வெளிக்காட்டுகிறார்.

- Advertisement-

நான் பலமுறை பும்ராவின் ந்தை எதிர்கொண்டு விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு முறை அவரது பந்தை எதிர்கொள்ளும் போது அதை சமாளித்து ரிதம் செட் செய்ய, கொஞ்சம் பந்துகள் தேவைப்படுகிறது. மற்ற பந்து வீச்சாளர்களை விட நமக்கு அருகே தனது கையில் இருந்து பந்தை ரிலீஸ் செய்வதும் பும்ரா தான். இதனால் நாம் நினைப்பதை விட பந்து வேகமாக வருவதுடன் அது ஒரு வித்தியாசமான ஆக்சனாவும் உள்ளது.

பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய பும்ரா, பந்தின் வேகத்தையும் எளிதாக குறைக்கிறார். அதிக பவுன்சும் போடும் பும்ரா, ஒரு பந்து வீச்சாளராக முழுமையான பேக்கேஜாக உள்ளார்என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

சற்று முன்