வீடியோ: பேட்ஸ்மேன் செயலால் கடுப்பாகி பந்தை அப்படியே வீசி எறிந்த சிராஜ். திகைத்து நின்ற ஸ்மித்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 7-ஆம் தேதியான நேற்று துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களை குவித்து இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த போது ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களம்புகுந்தனர். அதன்படி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மேலும் 142 ரன்கள் குவித்து இறுதியில் 469 ரன்களுக்கு தற்போது முதல் இன்னிங்க்ஸை முடித்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாட தயாராகி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் 95 ரன்களுடன் ஆரம்பித்த ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 31-வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்த முதல் இன்னிங்சில் 268 பந்துகளை சந்தித்த அவர் 19 பவுண்டரிகளுடன் 121 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிராஜ் வீசிய ஒரு ஓவரின் நான்காவது பந்தில் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்யாமல் ஸ்டம்பை விட்டு நகர்ந்து சென்றார். ஆனாலும் தான் முழுமையாக ஓடி வந்ததை எண்ணி கோபப்பட்ட சிராஜ் ஸ்டம்பை நோக்கி பந்தை எரிந்து தனது கோபத்தை வெளிக்காட்டினார்.

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

அப்போது ஸ்பைடர் கேமரா குறுக்கீடு காரணமாகவே கவனம் சிதறியது என ஸ்டீவ் ஸ்மித் சுட்டிக்காட்டினார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த முதல் இன்னிங்சின் முடிவில் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்