- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த சிஎஸ்கே வீரர் கொஞ்சம் கிறுக்கு பிடித்தவர்.. நம்பமுடியாத விஷயங்களை அவர் செய்திருக்கிறார் - ஸ்மித்...

இந்த சிஎஸ்கே வீரர் கொஞ்சம் கிறுக்கு பிடித்தவர்.. நம்பமுடியாத விஷயங்களை அவர் செய்திருக்கிறார் – ஸ்மித் பேச்சு

- Advertisement 1-

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அசாதாரணமான ஒரு இன்னிங்ஸ் ஆடியும் அவர்களால் வெற்றியை ருசிக்க முடியவில்லை

லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸி அணி 416 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். பின்னர் ஆடிய இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலியா.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 361 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் விக்கெட்கள் ஒரு பக்கம் விழுந்தாலும் அணியின் கேப்டன் பென் ஸ்டொக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.155 ரன்கள் சேர்த்த அவர் எதிர்பாராத விதமாக அவுட் ஆனதால் கடைசியில் இங்கிலாந்து அணி 43 ரன்களில் தோல்வி அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபப்ட்ட ஸ்டீவ் ஸ்மித் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டம் பற்றி பேசும்போது “பென் ஸ்டோக்ஸ் ஒரு நம்பமுடியாத கிறுக்குப் பிடித்த வீரர். அவரால் கிரிக்கெட்டில் எதையும் செய்ய முடியும். வெவ்வேறு வடிவ போட்டிகளில், இந்த மைதானத்தில் அவர் சில நம்பமுடியாத விஷயங்களைச் செய்துள்ளார். அவரின் கேட்ச்சை நான் முதலில் மிஸ் செயததால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தோம். ஆனால் கடைசியில் வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி.

- Advertisement 2-

முதல் இன்னிங்ஸில் நாங்கள் பந்துவீச வேண்டும் என விரும்பினோம். ஆனால் பேட்டிங் ஆடவேண்டி வந்ததால் அதில் நல்ல ஸ்கோரை எட்டவேண்டும் என விரும்பினோம். யாராவது ஒருவர் நல்ல பார்டன்ர்ஷிப் கொடுக்கவேண்டியது இருந்தது. அது நானாக இருந்ததில் மகிழ்ச்சி.

இந்த விக்கெட்டில் பேட் செய்வது கடினமானதாக இருந்தது. சில பந்துகள் எதிர்பார்த்தது போல பௌன்ஸ் ஆகின. சில பந்துகள் பௌன்ஸ் ஆகாமல் என்ன உயரத்தில் வரும் என்பதே தெரியவில்லை. அதனால் சில நல்ல பந்துகளில் நல்ல ஷாட் ஆடிகூட விக்கெட்டை இழக்க வேண்டி இருந்தது.” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்