- Advertisement 3-
Homeவிளையாட்டுஇங்கிலாந்து வீரர்களே மோசம்தான்.. 4 வீரர்களையும் கழற்றிவிடும் 4 அணிகள்.. மினி ஏலத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்.....

இங்கிலாந்து வீரர்களே மோசம்தான்.. 4 வீரர்களையும் கழற்றிவிடும் 4 அணிகள்.. மினி ஏலத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்.. நாளை மறுநாள் முக்கிய முடிவு அறிவிப்பு

- Advertisement 1-

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. இதனால் அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் நாளை மறுநாள் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றி கொள்ளவும் ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுவரை லக்னோ, மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளனர். லக்னோ அணியின் ஷெப்பர்ட் மும்பை அணியிலும், ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணியுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ராஜஸ்தான் அணியின் தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மினி ஏலத்திற்காக முன்பாக விடுவிக்கப்பட உள்ள வீரர்கள் யார் என்பது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சீசனில் மோசமாக ஆடிய வீரர்கள், இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஏற்ப வீரர்கள் விடுவிப்பது என்று அணிகள் அனைத்தும் தீவிரமாக இருந்து வருகிறது.

குறிப்பாக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து அணி வீரர்களை விடுவிக்க பல்வேறு அணி நிர்வாகங்களும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கும், பஞ்சாப் அணி சாம் கரணை ரூ.18.25 கோடிக்கும், ஐதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கும், மும்பை அணி ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கும் வாங்கின.

- Advertisement 2-

ஆனால் இவர்கள் மூவரில் சாம் கரணை தவிர்த்து மற்ற இருவரும் மோசமாக விளையாடினர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் புது மாப்பிள்ளை போல் ஜாலியாக காயம் என்று ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாது என்று கூறி விலகியுள்ளார். ஆர்ச்சர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.

அதேபோல் சாம் கரணுக்கு அதிக தொகை கொடுத்துள்ளதால், அவரை குறைந்த தொகைக்கு வாங்க பஞ்சாப் அணி முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஹாரி ப்ரூக் இந்திய மைதானங்களில் தொடர்ந்து திணறுவதால், ஐதராபாத் அவரை மொத்தமாக விடுவிக்க முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் மினி ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு பெரிய தொகை கொடுக்க ஐபிஎல் அணிகள் விரும்பாது என்று பார்க்கப்படுகிறது.

சற்று முன்