- Advertisement -
Homeவிளையாட்டுயார் சொன்னா தோனிக்கு கோவம் வராதுன்னு. என்ன ஒருமுறை விட்டாரு பாருங்க ரைடு - பத்ரிநாத்...

யார் சொன்னா தோனிக்கு கோவம் வராதுன்னு. என்ன ஒருமுறை விட்டாரு பாருங்க ரைடு – பத்ரிநாத் பேச்சு

- Advertisement-

இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட்ருமான சுப்பிரமணியம் பத்ரிநாத் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி என இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் பத்ரிநாத் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார்.அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை விளையாடயுள்ள அவர் 95 போட்டிகளில் பங்கேற்றுள்ளார், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாமல் இருந்தாலும் ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 100 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் உடையவர்.

அதிலும் தோனியின் தலைமையின் கீழ் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முக்கியமான பல போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் தோனி எப்போதாவது உங்களை திட்டியிருக்கிறாரா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த பத்ரிநாத் கூறுகையில் :

தோனி என்னை ஒருமுறை திட்டி இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் நடைபெற்ற ஒரு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடி 190 ரன்களுக்கு மேல் குவித்து விட்டோம். ஆனால் அப்போது என்னுடைய தொடை பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

அதனால் பீல்டிங்கின் போது என்னால் வேகமாக ஓடி குனிய முடியவில்லை. அப்போது முக்கியமான நேரத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த நான் பந்தினை குனிந்து பிடிக்க முடியாமல் பவுண்டரி கொடுத்து விட்டேன். பின்னர் அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் ஓய்வறைக்கு வந்த அவர் எல்லோரையும் ஒருமுறை சுற்றி பார்த்தார். அவர் கண்ணில் நான் பட்டதும் என்னை கடுமையாக திட்டினார்.

- Advertisement-

இருப்பினும் அடுத்த நாள் என்னிடம் வந்து என்னுடைய பிரச்சனையை அறிந்த அவர் மன்னித்து விடுங்கள் உங்களுக்கு தசைப்பிடிப்பு இருப்பது எனக்கு தெரியாது என்று மன்னிப்பு கேட்டார். தோனியும் கோபப்படுவார் அவரும் மனிதன் தானே என பத்ரிநாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்