- Advertisement -
Homeவிளையாட்டு17 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே செய்ய போகும் சம்பவம்.. சுனில் கவாஸ்கர் சொன்ன அந்த...

17 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே செய்ய போகும் சம்பவம்.. சுனில் கவாஸ்கர் சொன்ன அந்த விஷயம்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணியை எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதோ, அதே அளவுக்கு தோனியின் தலைமையில் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கூட ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். ஐபிஎல் ஆரம்பித்த ஆண்டில் இருந்தே அனைத்து சீசன்களிலும் தோனி தான் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வருகிறார்.

இவரது தலைமையில், இதுவரை ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள சிஎஸ்கே, நடப்பு சாம்பியனாகவும் திகழ்ந்து வருகிறது. கடந்த சீசனில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், சிக்ஸ் மற்றும் ஃபோரை ஜடேஜா அடித்து சென்னை அணி கோப்பையை கைப்பற்றியதும் அவரை தோனி தூக்கி எமோஷனலாக கொண்டாடியது என நடந்த சம்பவங்கள், இன்று வரை ரசிகர்கள் கண் முன்னே ஏதோ சினிமா போல தான் ஓடிக்.கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசன், 42 வயதாகும் தோனியின் கடைசி சீசனாக கூட இருக்கலாம் என்ற கருத்து ஒன்றும் பரவலாக இருந்து வருகிறது. இதனால், ஐபிஎல் தொடர்களில் சிறந்த கேப்டனாக இருக்கும் அவர், கடைசி சீசனில் இந்த முறை ஆடுகிறார் என்றால், சென்னை அணி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்று அவருக்கு அசத்தலான ஃபேர்வெல் ஒன்றை கொடுக்க வேண்டும் என்பதும் சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

ஆனால், வழக்கம் போல இந்த முறையும் துடிப்பான புது இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள், பல அணிகளிலும் இடம்பெற்றுள்ளதால் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்வதற்கு கடந்த முறையை விட இந்த முறை அதிக போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிலைமை எதுவாக இருந்தாலும் தன்னிடம் உள்ள வீரர்களை கொண்டு நிச்சயம் சிறப்பாக திட்டம் வகுத்து, ஐபிஎல் கோப்பையை ஆறாவது முறையாக சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement-

இதனிடையே, இந்த முறை நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றி முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “வழக்கம் போல இந்த முறையும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். கடந்த 16 சீசன்களில், 12 முறை அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அது 13 வது முறையும் நடக்க போவது போல தெரிகிறது.

கடந்த சீசனில் சிஎஸ்கே பவுலிங்கில் பலவீனம் இருந்தது. அதே போல, அம்பத்தி ராயுடு இடமும் காலியாக இருக்க, மினி ஏலத்தில் சரியான வீரர்களை வாங்கி அதனை நிரப்பிக் கொண்டார்கள். சிஎஸ்கே அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என சிறந்த கலவையில் உள்ளனர்” என்று சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

சற்று முன்