- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த பேட்ஸ்மேன் தோனியோட காப்பி.. ஐபிஎல் தொடரில் நடக்க போகும் சம்பவம்.. சுனில் கவாஸ்கர் போட்ட...

அந்த பேட்ஸ்மேன் தோனியோட காப்பி.. ஐபிஎல் தொடரில் நடக்க போகும் சம்பவம்.. சுனில் கவாஸ்கர் போட்ட கணக்கு..

- Advertisement-

இந்திய அணி அடுத்தடுத்து உலக கோப்பை தொடர்களை வென்று நம்பர் 1 அணியாக வலம் வந்த போது அதனை கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் எம். எஸ். தோனி. அவரது தலைமையில் இந்திய அணி ஆடிய முதல் பெரிய தொடரான டி 20 உலக கோப்பையை சொந்தமாக்கி அசத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என எதை நினைத்தாலும் தோனியின் கேப்டன்சி தான் உடனடியாக நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு கேப்டனாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சிறந்த ஆளுமையாக இருந்த தோனி, கீப்பர் நின்றபடி திட்டங்களை பந்து வீச்சாளர்களுக்கு வகுத்து கொடுத்து, அதற்கேற்ப ஃபீல்டிங்கையும் அமைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை கதற விடுபவர்.

- Advertisement -

இவர் 2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மட்டும் தொடர்ந்து ஆடி வருகிறார். அவரது தலைமையில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரை வென்று நடப்பு சாம்பியனாகவும் சிஎஸ்கே திகழ்ந்து வருகிறது. இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் அவரது கடைசி தொடராக இருக்கும் என ஒரு கருத்து பரவலாக இருக்கும் நிலையில், உண்மையாகும் பட்சத்தில் கோப்பையுடன் தோனி விடைபெற வேண்டும் என்பதும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

கேப்டன்சி மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் மாஸ் காட்டும் தோனி, பல போட்டிகளில் பினிஷராக ருத்ரதாண்டவம் ஆடி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். கடந்த சில ஐபிஎல் சீசனில் அவர் பேட்டிங் அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தாலும் இந்த முறை அதற்கெல்லாம் பதிலடி கொடுப்பார் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement-

இந்த நிலையில், தோனியின் பேட்டிங்கை பிரபல ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் காப்பி அடிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிரடி வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆட உள்ளார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் குர்பாஸ் பற்றி பேசிய கவாஸ்கர், “குர்பாஸின் பேட்டிங்கை நான் பார்த்த வரையில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவர் ஆக்ரோஷமாக ஆடும் போது சிறிதாக தோனியின் பேட்டிங்கை காப்பி அடிப்பது போல் எனக்கு தோன்றுகிறது. அதுவே எனக்கு அவரிடம் மிகவும் பிடித்துள்ள விஷயமாகவும் உள்ளது” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியில், வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் சுனில் நரைன், ஸ்டார்க், ஆண்ட்ரே ரசல் என 3 பேர் உள்ள நிலையில், நான்காவது வீரருக்கான போட்டி, ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோருக்கு இடையே இருக்கும் என்றும் தெரிகிறது.

சற்று முன்