Homeகிரிக்கெட்அந்த அணியை சாதாரணமா நினைக்காதீங்க.. சேம்பியனா இருக்கணும்னா அவங்கள ஜெய்க்கறது அவசியம் - இந்திய அணிக்கு...

அந்த அணியை சாதாரணமா நினைக்காதீங்க.. சேம்பியனா இருக்கணும்னா அவங்கள ஜெய்க்கறது அவசியம் – இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

-Advertisement-

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள இந்திய அணி தாங்கள் விளையாடியுள்ள 8 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து இந்த உலகக்கோப்பை தொடரின் எஞ்சியுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி வரும் நவம்பர் 12-ஆம் தேதி நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியை சென்னையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணி இதுவரை மிகச் சிறப்பாக பயணித்து வருகிறது.

-Advertisement-

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்தியா இந்திய அணி கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியையும் வீழ்த்த காத்திருக்கிறது. இப்படி 8 போட்டியிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ள வேளையில் இந்த ஒன்பதாவது போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் கடந்த போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதே உத்வேகத்துடன் நெதர்லாந்து அணியும் பெரிய அளவில் வீழ்த்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நீங்கள் சாம்பியன் அணியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் எந்த ஒரு அணியும் சாதாரணமாக நினைக்காமல் பெரிய வெற்றியை குவிக்க வேண்டும்.

-Advertisement-

அந்த வகையில் இந்த தொடரில் ஏற்கனவே பல சிறந்த அணிகளை இந்திய அணி வீழ்த்தி இருந்தாலும் நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் நாம் பெரிய வெற்றியை பெற வேண்டியது அவசியம். இதுவரை நமது அணி லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதை நாம் அப்படியே கொண்டு செல்ல வேண்டும்.

அப்படி நாம் நெதர்லாந்து அணிகெதிராகவும் சிறப்பாக பெரிய வெற்றியை பெறும் பட்சத்தில் அந்த வெற்றி நாக்கவுட் போட்டிகளிலும் இந்திய அணி எந்த ஒரு பதட்டமும் இன்றி விளையாட உதவும். எனவே நெதர்லாந்து அணியை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அந்த போட்டியையும் ஒரு முக்கியமான போட்டியாக நினைத்து பெரிய வெற்றி பெற வேண்டியது அவசியம் என சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்