- Advertisement 3-
Homeவிளையாட்டுபும்ராவுக்கு நடந்தது ரோஹித், கோலிக்கு நடந்தா ஏத்துப்பீங்களா.. அவங்களால தான் தப்பிச்சாங்க.. கொதித்த கவாஸ்கர்..

பும்ராவுக்கு நடந்தது ரோஹித், கோலிக்கு நடந்தா ஏத்துப்பீங்களா.. அவங்களால தான் தப்பிச்சாங்க.. கொதித்த கவாஸ்கர்..

- Advertisement 1-

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி இருந்த உலக கோப்பை போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறாது என்று தான் அனைவருமே கருதினர். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்த சூழலில் வெற்றியும் அவர்கள் பக்கமாக இருந்தது. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் லைன் அப்பில் அனைவரும் தொடர்ந்து சொதப்பி வரும் சூழலில் பந்து வீச்சாளர்கள் மிகத் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

உலக கோப்பைத் தொடரில் ஆடி உள்ள இரண்டு போட்டிகளிலும் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலரும் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டு வருகின்றனர். இரண்டு போட்டிகளிலும் ரிஷப் பந்த் மட்டும் நல்லபடியாக ஆட மற்ற எந்த வீரர்களும் தொடர்ச்சியான பங்களிப்பை அளிக்கத் திணறி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள பிட்ச்கள் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்த போதும் சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணி அங்கே தடுமாறுவது அதிகம் கேள்விகளை எழுப்பியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்கள் தான் எடுத்திருந்தது. பேட்டிங்கில் ரிஷப் பந்த் தவிர யாருமே ரன்களை சேர்க்காததால் குறைந்த ஸ்கோரை அடித்திருந்தது இந்திய அணி.

ஆனால் பந்து வீச்சில் கலக்கியதால் பாகிஸ்தானை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருந்தது இந்திய அணி. முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்த பும்ரா, தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருதினையும் இந்த தொடரில் வென்றுள்ளார்.

- Advertisement 2-

இந்த நிலையில் இந்திய அணி வெற்றிக்கு பிறகு சுனில் கவாஸ்கர் தெரிவித்த கருத்து அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரையில் பந்து வீச்சாளர்களுக்கு குறைவான புகழ்தான் கிடைத்து வருகிறது. இதனால் அவர்கள் தற்போது ஃபார்முக்கு வந்துள்ளது சிறப்பாக உள்ளது. இந்த போட்டியில் பும்ரா முதல் ஓவரை வீசி இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால் அவர் மூன்றாவது ஓவரை தான் முதல் ஓவராக வீசியிருந்தார். எதற்கு 12 பந்துகளை அவர் வீணடிக்க வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய சொல்ல முடியுமா?. ஏனென்றால் அவர்கள் நமது அணியின் சிறந்த வீரர்கள். இதனால் முதல் இரண்டு இடங்களில் தான் அவர்களால் ஆட முடியும்.

அதே போல சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் முதல் பந்தை நிச்சயம் வீசியாக வேண்டும். இந்த பிரச்சனைகள் இருந்தாலும் இந்திய அணி பதட்டமான சூழ்நிலையை சரியாக கையாண்டு வெற்றி பெற்றிருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் பேட்டிங்கில் அவர் செய்த தவறுகள் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் போனது.

இந்திய அணியின் வீரர்கள் சிறந்த அணுகுமுறை மற்றும் பொறுப்பில்லாமல் ஆடியிருந்தனர். பெரிய ஷாட்களை தேவை இல்லாத நேரத்தில் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டுகளை இழந்தனர்” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

சற்று முன்