- Advertisement -
Homeகிரிக்கெட்டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தட்டி தூக்க இந்த ப்ளேயர்ஸ்தான் பக்காவா செட் ஆவாங்க – சூப்பரான தனது...

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தட்டி தூக்க இந்த ப்ளேயர்ஸ்தான் பக்காவா செட் ஆவாங்க – சூப்பரான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட சுனில் கவாஸ்கர்

-Advertisement-

நாளை தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வருகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளும் ப்ளேயிங் லெவனில் எந்தந்த வீரர்களை விளையாட வைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடமும் உள்ளது.

இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடப்பதால் அதற்கேற்றார் போல வீரர்களை தேர்வு செய்யவேண்டிய சூழல் நிலவுகிறது. ஓவல் மைதானம் பெரிதாக சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதால் இந்திய அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழல்பந்து வீச்சாளர்கள் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் லிட்டில் மாஸ்டருமான சுனில் கவாஸ்கர், எந்த 11 வீரர்களோடு இந்திய அணி களம் இறங்கினால் இந்திய அணி வெற்றி பெரும் என்னும் வகையில் தன்னுடைய பிளேயிங் லெவன் இந்திய அணியை அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள அணி பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் கொண்ட கலவையாக உள்ளது.

அவர் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளனர். அடுத்து மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் அவர் எந்த மாற்றத்தையும் செய்யாமல் புஜாரா, விராட் கோலி மற்றும் ரி எண்ட்ரி கொடுத்துள்ள அஜிங்யே ரஹானே ஆகியோரை வைத்துள்ளார்.

-Advertisement-

அணியின் விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் மற்றும் கே எஸ் பரத் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் கே எஸ் பரத்துக்கே வாய்ப்பை கொடுத்துள்ளார். இதற்குக் காரணமாக அவர் கேஎஸ் பரத் பார்டர்- கவாஸ்கர் தொடரில் முழுமையாக விளையாடிய அனுபவம் பெற்றவர் என்பதை கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: எனக்கு தோனியை பத்தி தெரியும். அவருக்கு ஒரு பிரச்சனைனா ஜடேஜா கிட்ட அவர் இத தான் செஞ்சி இருப்பாரு – வாசிம் அக்ரம் பேச்சு

ஆச்சர்யப்படும் வகையில் கவாஸ்கர், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரையும் பிளேயிங் 11-இல் சேர்த்துத்துள்ளார். அதே வேலையில், முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் அவரின் இந்த அணியில் இடம்பெற்றுளளனர். ஜடேஜாவிற்கு 7வது இடமும், அஸ்வினுக்கு 8வது இடமும், முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூருக்கு 9,10,11 ஆகிய இடங்களை அவர் வழங்கி உள்ளார்.

-Advertisement-

சற்று முன்