- Advertisement -
Homeவிளையாட்டுதடுக்கி விழ இருந்த தோனி. நல்ல வேலையாக தாங்கி நின்ற கவாஸ்கர். அப்படியே கையேடு ஒரு...

தடுக்கி விழ இருந்த தோனி. நல்ல வேலையாக தாங்கி நின்ற கவாஸ்கர். அப்படியே கையேடு ஒரு ஆட்டோகிராப் பெற்ற வீடியோ

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியை கொல்கத்தா அணியிடம் தோற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் அந்த போட்டிதான் சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் போட்டி என்பதுதான். இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணியினர் மைதானத்தை சுற்றி வந்து சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது தோனி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தனர். அப்போது ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பைப் பார்த்து தோனி நெகிழ்ந்து போனார்.

இந்த நிகழ்வின் போது தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானம் முழுவதும் சுற்றி வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தனர். பின்னர் வீரர்கள் ரசிகர்களுக்காக சில பரிசுகளை கேலரிகளை நோக்கி வீசினர். தோனியும் அதுபோல தொப்பிகள் மற்றும் டென்னிஸ் பந்துகளை வீசினார்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் மையமாக தோனிதான் இருந்தார். ஏனென்றால் இனிமேல் அவரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை காண முடியுமோ என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஒருவேளை அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளோடு ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மைதானத்தை சுற்றி வந்த தோனி ஒரு கட்டத்தில் பவுண்டரி லைன் கயிற்றில் கால் மோதி விழ இருந்தார். அப்போது அவரிடம் ஓடிவந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தன்னுடைய சட்டையின் மேல் கையெழுத்து போட சொல்லிக் கேட்டார். இதைப் பார்த்து ஒரு கணம் திகைத்த தோனி, பின்னர் அவருக்காக கையெழுத்து போட்டார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாக இப்போது பரவி வருகிறது.

- Advertisement-

இந்திய கிரிக்கெட்டே அண்ணாந்து பார்த்து கொண்டாடும் ஜாம்பவான் வீரரான கவாஸ்கர் தன்னைவிட வயது குறைந்த ஒரு வீரரிடம் இப்படி ஆசை ஆசையாக ஓடி வந்து கையெழுத்து வாங்கியது மெய்சிலிர்க்கும் ஒரு தருணமாக அமைந்தது.

சற்று முன்