இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் வீரர்கள் குறித்தும் பேசி தங்களது கவனத்தை ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் குறித்து தங்களது யூடியூப் பக்கங்களின் மூலமும், சமூக வலைதள பக்கங்களின் மூலமும் முன்னாள் வீரர்கள் பலரும் பேசி வருவதை அவர் கண்டித்துள்ளார்.
உலகெங்கிலும் பரவி வந்த கொரோனா பாதிப்பு காரணமாக உலகமே ஊரடங்கு நிலைக்கு தள்ளப்பட்ட வேலையில் பல்வேறு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது சமூகவலைதள பக்கத்தின் மூலம் சில பக்கங்களை உருவாக்கியும், youtube மூலம் சேனல்களை ஆரம்பித்தும் கிரிக்கெட் குறித்து பல்வேறு விடயங்களை பேசி வந்தனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் வீரர்கள் குறித்துமே அனைவரும் அதிகளவில் பேசி வருகின்றனர். அதன் காரணம் யாதெனில் : இந்திய ரசிகர்கள் மத்தியில் இப்படி பேசினால் அவர்களது வீடியோ பெரிய அளவில் ரீச் ஆகும் என்பதன் காரணமாகவே அவர்கள் இப்படி செய்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரங்களால் கோபம் அடைந்த சுனில் கவாஸ்கர் முன்னாள் வீரர்கள் இதுபோன்று சோசியல் மீடியாவில் இந்திய அணி குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் ஷாஹீன் அப்ரிடி, விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோருடைய ஒப்பீடு குறித்த டாப்பிக்கே அதிக அளவில் பேசப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : முன்னாள் வீரர்கள் இந்திய அணி குறித்து அளிக்கும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவுகின்றன.
அதிலும் குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் இந்திய அணியை குறி வைத்து அதிக அளவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதே போன்று இந்திய வீரர்கள் யாராவது ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் வீரர்களை பற்றி பேசுகிறார்களா? ஆனால் அவர்கள் தங்களது சுயலாபத்திற்காக இதனை செய்து வருகின்றனர்.
அதிலும் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்டர் என்றும் ரோஹித் சர்மாவுக்கு எதிராக ஷாஹீன் அப்ரிடி சிறப்பாக செயல்படுகிறார் என்றும் சச்சினை விட இன்சமாம் உல் ஹக் சிறந்தவர் என்றும் சில கருத்துக்களை அவர்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெறவே பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற அவர்களது கருத்திற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அதேபோன்று இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மூன்றாவது இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்றும் நான்காவது இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்றெல்லாம் அவர்கள் ஆலோசனை தருகிறார்கள். உங்களுடைய அட்வைஸ் எங்களுக்கு தேவையில்லை என காட்டமாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.