- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் ஷர்மாவின் ஹாட்ரிக்கை போல.. சதமடித்ததும் சுனில் நரைன் படைத்த அரிய சம்பவம்..

ரோஹித் ஷர்மாவின் ஹாட்ரிக்கை போல.. சதமடித்ததும் சுனில் நரைன் படைத்த அரிய சம்பவம்..

- Advertisement 1-

கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதுகெலும்பாக இருந்து வருகிறார் சுனில் நரைன். அந்த அணியில் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் என இரண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தான் பல ஆண்டுகளாக அவர்கள் பல போட்டிகள் ஜெயிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்கி வருகின்றனர்.

அதிலும் கௌதம் கம்பீர், கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த சமயத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி நல்லதொரு அதிரடி தொடக்கத்திற்கு காரணமாகவும் இருந்து வந்தார் சுனில் நரைன்.

அப்படி இருக்கையில், கம்பீர் கொல்கத்தா அணியில் இருந்து லக்னோ அணியில் இணைந்ததன் பின்னர், தொடக்க வீரராக கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக நரைன் பெரும்பாலும் களமிறங்கவில்லை. இதனிடையே இந்த ஆண்டு கொல்கத்தா அணியில் மீண்டும் ஆலோசகராக இணைந்திருந்த கௌதம் கம்பீர், அந்த அணியின் ஒட்டுமொத்த பிளானையும் அப்படியே தலைகீழாக திருப்பி போட்டுள்ளார்.

எதிரணியினர் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவுக்கான திட்டங்களை வகுத்து அதற்கேற்ப வீரர்களை வைத்து காய் நகர்த்தி வரும் கம்பீர், சுனில் நரைனை மீண்டும் தொடக்க வீரராக களம் இறக்கி இருந்தார். இது அனைத்து போட்டிகளிலுமே அவர்களுக்கு கை கொடுத்திருந்த நிலையில் தற்போது அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலிலும் சுனில் நரைன் பெயர் இடம்பெற்றுள்ளது.

- Advertisement 2-

மேலும் 500 போட்டிகளுக்கு மேல் டி 20 களில் ஆடி உள்ள சுனில் நரைன், எக்கச்சக்க விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் ஒருமுறை கூட சதம் அடித்ததில்லை. அப்படி இருக்கையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்த போட்டியில் சதம் அடித்து இருந்த சுனில் நரைன் ஒட்டுமொத்த கொல்கத்தா ரசிகர்களையும் தலை நிமிர செய்துள்ளார்.

மேலும் இந்த சதத்தின் காரணமாக ஐபிஎல் தொடரில் அரிய சாதனை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார் சுனில் நரைன். ஐபிஎல் போட்டிகளில் இதற்கு முன்பாக ஹாட்ரிக் மற்றும் சதம் அடித்த 2 வீரர்கள் தான் உள்ளனர். அதில் ஒருவர் ரோஹித் சர்மா. மற்றொருவர் ஷேன் வாட்சன். இவர்களுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் சதம் என இரண்டுக்கும் சொந்தக்காரராக உள்ள வீரராக தற்போது சுனில் நரைன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்