- Advertisement -

10 ஓவர்களில் இமாலய சாதனை.. வீடியோ கேம் ஆடிய ஹெட் – அபிஷேக்.. மும்பைக்கு பாய் சொன்ன ஹைதராபாத்..

ஐபிஎல் தொடரில் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டி பல்வேறு சாதனைகளை உடைத்து நொறுக்கியதுடன் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு நிமிடம் அப்படியே நின்று போக செய்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சமீபத்தில் நடந்த போட்டியில் மோதி இருந்தது.

இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமானது என்பதால் வெற்றிபெறும் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகவும், மறுபுறம் தோல்வியடையும் அணிக்கு அதன் வாய்ப்பு மங்கி போகவும் செய்யும் என்ற நிலையில் தான் இவர்கள் இருவரும் பலப்பரீட்சை நடத்தி இருந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி விக்கெட்டுகளை ஆரம்பத்திலே இழந்ததால் நிதானமாக ஆடித்தான் ரன் சேர்த்திருந்தது. 10 ஓவர்களில் 60 ரன்களைக் கூட அவர்கள் தாண்டாததால், 140 ரன்கள் வரை தான் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 7 ஓவர்களில் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர்.

இதனால் நினைத்ததை விட 20 ரன்கள் வரைக்கும் அதிகமாக அடித்திருந்தால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. பூரன் 26 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஆறு ஃபோர்களுடன் 48 ரன்களும், பதோனி 30 பந்துகளில் ஒன்பது ஃபோர்களுடன் 55 ரன்கள் எடுத்திருந்தனர்.

- Advertisement -

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, இரண்டாவது பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் காணும் என்று தான் பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தது. ஆனால் இந்த முறை அப்படியே நேர்மாறாக ஆடிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ஏதோ வீடியோ கேமில் வருவது போன்ற கிரிக்கெட்டையும் ஆடி இருந்தனர்.

ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று கொண்டே இருக்க அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ருத்ரதாண்டவம் ஆடினார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். 9.4 ஓவர்களில் 166 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்ததுடன் மட்டுமில்லாமல் பல்வேறு சாதனைகளையும் இந்த இணை அடித்து நொறுக்கி உள்ளது.

அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் எட்டு ஃபோர்கள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 75 ரன்களும், ஹெட் 30 பந்துகளில் 8 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 89 ரன்களும் எடுத்ததால் அவர்கள் பத்தாவது ஒருவர் முடிவதற்குள்ளாகவே வெற்றி இலக்கை எட்டி விட்டனர். ஏறக்குறைய 110 ரன்கள் பவுண்டரியிலேயே அவர்கள் அடித்திருந்த நிலையில், மிக எளிதாகவும் லக்னோ அணியின் பந்து வீச்சாளர்களை நொறுக்கி போட்டியை முடித்து விட்டனர்.

இதன் மூலம் 160-க்கு மேற்பட்ட இலக்கை 10 வது ஓவருக்குள் எட்டிப் பிடித்த முதல் அணி என்ற சிறப்பையும் தற்போது ஹைதராபாத் அணி பெற்று சரித்திரம் படைத்துள்ளது.

- Advertisement -

Recent Posts