- Advertisement -
Homeவிளையாட்டுநடராஜனுக்கு இனி இடமில்ல.. கூடவே இன்னொரு இந்திய வீரருக்கும் ஆப்பு வைக்கும் ஹைதராபாத்.. போட்டுடைத்த முன்னாள்...

நடராஜனுக்கு இனி இடமில்ல.. கூடவே இன்னொரு இந்திய வீரருக்கும் ஆப்பு வைக்கும் ஹைதராபாத்.. போட்டுடைத்த முன்னாள் வீரர்..

- Advertisement-

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் இது நடக்க இருப்பதால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மத்தியிலும் அதிக பரபரப்பு உருவாகியுள்ளது. இந்த ஏலம் தொடர்பான மீட்டிங் சில மாதங்களுக்கு முன்பாக நடந்திருந்த நிலையில் அனைத்து அணிகளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன் வைத்திருந்தனர் .

அது மட்டுமில்லாமல் சில அணிகளின் உரிமையாளர்களுக்கு இடையே மோதல் உருவானதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், பிசிசிஐ இன்னும் உறுதியான தகவலை வெளியிடாமல் இருந்து வருகிறது. மெகா ஏலம் என்றாலே நிச்சயம் குறைந்த வீரர்களை மட்டும் தான் ஒரு அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவாகும் .

ஆனால் பல அணிகள் பணம் செலவு செய்து உருவாக்கிய வீரர்களை வேறு அணிக்கு எப்படி விடுவது என்றும் இதனால் நிறைய வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வந்தனர். இன்னொரு பக்கம் மெகா ஏலம் நடத்த வேண்டாம் என்றும் மினி ஏலமே அனைத்து ஆண்டுகள் நடந்தால் போதும் என்றும் சில விவாதங்களை முன் வைத்திருந்தனர்.

பிசிசிஐ தான் இதில் இறுதி முடிவு எடுக்கும் என்பதால் அதன் அறிவிப்பு வரும் வரை நிச்சயம் அனைவரும் காத்திருந்து தான் ஆக வேண்டும். இதற்கு மத்தியில் பல கிரிக்கெட் நிபுணர்கள் மெகா ஏலத்துக்கு முன்பாக யாரையெல்லாம் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொள்வார்கள் என்பது பற்றி தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement-

அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்துக்கு முன்பாக யாரை தக்க வைக்கும் என்பது பற்றியும் யாரையும் விடுவிக்கும் என்பது குறித்தும் சில கருத்துக்களை ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், ஹென்ரிச் க்ளாஸன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை தக்க வைக்கும் என நினைக்கிறேன்.

ஏனென்றால் இந்த 4 பேரையும் எந்த காரணம் கொண்டும் அவர்கள் வேறு அணிக்கு விட்டு கொடுக்க மாட்டார்கள். இரண்டு இடதுகை தொடக்க வீரர்களும் அச்சுறுத்தலான பேட்ஸ்மேன்களாக இருக்க, ஹென்ரிச் உள்ளே வந்தாலும் அடித்து நொறுக்கி விடுவார்.

குறைந்த வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென பிசிசிஐ அறிவித்தால், நிச்சயம் மார்க்ராமை அவர்கள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இதே போல, 3 ஆண்டுகள் ஆட வேண்டும் என்பதால் புவனேஷ்வர் குமாரையும் ஹைதராபாத் அணி தக்க வைத்துக் கொள்ளாது. மெகா ஏலம் என்பதால் இந்த முறை நிறைய சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும் என தெரிகிறது” என ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.

இவர்களை தவிர, ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக ஆடி வரும் நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோரை பற்றி ஆகாஷ் சோப்ரா பேசாத நிலையில் அவர்களை ஹைதராபாத் அணி விடுவிக்கும் என்றே தெரிகிறது.

சற்று முன்