நேற்று லண்டன் ஸ்பிரிட் மற்றும் ஓவல் இன்விசிபிள்ஸ் அணிகளுக்கு இடையே 100 பந்துகள் கொண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பிற்கு எடுத்துச் சென்றது என்றே கூற வேண்டும். இதில் முதலில் பேட்டிங் செய்த ஓவல் இன்விசிபிள்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தனர்.
அந்த அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதே சமயம் மற்றொரு தொடக்க வீரராக வில் ஜாக்ஸ் 48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசென் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அவரைத் சாம்கரன் களத்தில் இறங்க அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இப்படியாக 100 பந்துகள் முடிவில் அந்த அணி 189 ரன்கள் குவித்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த லண்டன் ஸ்பிரிட் அணி 100 பந்துகளில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதில் தொடக்க வீரரான சாக் கிராலி 21 பந்துகளில் 19 ரன்கள் அவுட் ஆக, அடுத்த தொடக்க வீரரான ஆடம் ரோசிங்டன் 32 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக மாட் கிரிட்ச்லி மட்டும் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியின் சுவாரசியமே கடைசி ஓவர் தான். கடைசி 5 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிக்கொண்டிருந்தார் சாம்கரன். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்து பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்து சிக்ஸருக்கு பறந்தது.
கடைசி இரண்டு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நான்காவது பந்து சிக்ஸர் லைனுக்கு சென்றது அப்படியும் அங்கிருந்து பீல்டர் எகிரி பந்தை தடுத்துவிட்டார். அதனால் ஆறு போக வேண்டிய பந்தில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே ஓடி எடுத்தனர். அதேபோல் கடைசி பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க, அந்தப் பந்தை நோபால் என அறிவித்தார் அம்பயர்.
Top fielding, power hitting, last ball no-ball 😲 Even Bollywood movies wouldn't have a climax like this!#TheHundred pic.twitter.com/y38PUELKQY
— FanCode (@FanCode) August 16, 2023
இதனால் ஆட்டத்தின் சுவாரஸ்யம் இன்னும் கூடியது அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த கடைசி பந்தை வீசினார் சாம் கரன். அந்த பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரன்கள் ஏதும் எடுக்காமல் லண்டன் ஸ்பிரிட் அணி தோல்வியுற்றது. இதன் மூலம் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஓவல் இன்விசிபிள்ஸ் அணி.