- Advertisement -
Homeவிளையாட்டுப்பா என்ன மாதிரியான ஒரு கேட்ச்... யார் சாமி இந்த லேடி... தோனிக்கே டப் கொடுப்பாங்க...

ப்பா என்ன மாதிரியான ஒரு கேட்ச்… யார் சாமி இந்த லேடி… தோனிக்கே டப் கொடுப்பாங்க போலயே

- Advertisement-

நூறு பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியான தி 100 போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆடவர் அணி, மகளிர் அணி என இரண்டு அணிகளும் தற்போது அதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று லண்டன் ஸ்பிரிட் மற்றும் நார்த்தன் சூப்பர் சார்ஜஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சுவாரஸ்யமான ஒரு கேட்ச் சம்பவம் அரங்கேரி உள்ளது இந்த மேட்ச் குறித்தும் அந்த கேட்ச் குறித்தும் விரிவாக பார்ப்போம்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் ஸ்பிரிட்ஸ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்தது. இதில் துவக்க வீராங்கனையான நியாம் ஹாலண்ட் நான்கு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களத்தில் இருந்த டேனியல் கிப்ஸன் 17 பந்துகளில் 24 ரன்கள் அடித்து வெளியேற ஹீதர் நைட் 13 ரன்கள் இருக்கும்போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். அந்த அணியை பொறுத்தவரை அமெலியா கெர் என்பவர் மட்டும் 32 பந்துகளில் 60 ரன்கள் விளாசி அபாரமாக ஆடினார்.

இதன் காரணமாக லண்டன் ஸ்பிரிட்ஸ் அணி ஓரளவிற்கு நல்ல ஒரு ரன்களை சேர்க்க முடிந்தது. இவர்களைத் தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த நார்தன் சூப்பர் சார்ஜஸ் அணியின் வீராங்கனைகள் ஆரம்பம் முதலே தங்களுடைய நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

- Advertisement-

இந்த அணியின் துவக்க வீராங்கனையான மேரி கெல்லி 5 ரன்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீராங்கனியான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதே போல, பி கெர்
வீசிய பந்தில் மோனகனிடம் கேட்ச் கொடுத்து ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 38 ரன்களில் வெளியேறினார்.

இப்படி ரன்களும் விக்கெட்டுகளுமாக சென்று கொண்டிருந்த இந்த போட்டியில் 99 ஆவது பந்தல் நார்தன் சூப்பர் சார்ஜஸ் மகளிர் அணி 136 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் மிகவும் சுவாரஸ்யமாக பார்க்கப்பட்டது ஆலிஸ் டேவிட்சன் விக்கெட் தான்.

நார்த்தன் சூப்பர் சார்ஜஸ் அணி 105 ரன்கள் இருந்த சமயத்தில் ஆலிஸ் டேவிட்சன், பி க்ளென் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்த போது அது பேட்டில் சரியாக படவில்லை அதே சமயம் அவரது உடல் மீது அந்தப் பந்து பட்டு அங்கேயே விழப் பார்த்தது. ஆனால் விக்கெட் கீப்பர் கோஸ் தனது வலது கை க்லோசை கொண்டு அந்த பந்தை தாவி பிடித்து ஆலிஸ் டேவிட்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த நிகழ்வானது பலருக்கு தோனியை நினைவூட்டியது என்றே கூற வேண்டும்.

சற்று முன்