- Advertisement -
Homeவிளையாட்டுஜெயிக்க போறது யாரு.. சிஎஸ்கே, மும்பை மோதுன கடைசி 9 மேட்சில் இருந்த ஒற்றுமை.. வியந்த...

ஜெயிக்க போறது யாரு.. சிஎஸ்கே, மும்பை மோதுன கடைசி 9 மேட்சில் இருந்த ஒற்றுமை.. வியந்த ரசிகர்கள்..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இன்று (14.04.2024) நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெருகிறது. சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐந்து முறை கோப்பையை வென்று இரு அணிகளும் மற்ற அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருந்து வருவதுடன் எப்படிப்பட்ட தொடராக இருந்தாலும் இவர்கள் பிளே ஆப் கூட அசால்டாக முன்னேறி விடுகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை அவர்கள் ஆடி உள்ள மூன்று போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்திருந்தனர்.

இதனால் மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெறுவது அந்த அணிக்கு ஒரு பாதகமாக பார்க்கப்பட்டாலும் நிச்சயம் எதிரணியின் மைதானத்தில் வெற்றியை தொடங்குவதில் சிஎஸ்கே முனைப்பு காட்டும் என்றும் தெரிகிறது. மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார், டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவருமே பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அந்த அணியின் பும்ராவும் எதிரணிக்கு அச்சுறுத்துதலாக இருந்து வருகிறார்.

இதேபோல சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, ருத்துராஜ், முஸ்தாபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே என அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அதனை இந்த முறை தொடரும் பட்சத்தில் மும்பை அணிக்கு நல்ல ஒரு நெருக்கடியை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இரண்டு பெரிய அணிகள் இந்த தொடரில் ஆடவுள்ள போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement-

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்பு ஆடிய 9 ஐபிஎல் போட்டிகளில் இருந்த ஒரு ஒற்றுமை பற்றி தற்போது பார்க்கலாம். கடைசியாக இவர்கள் ஆடிய ஒன்பது போட்டிகளில் சென்னை அணி ஐந்து முறையும், மும்பை அணி நான்கு முறையும் டாஸ் வென்றுள்ளது. அப்படி எந்த அணி இந்த போட்டிகளில் டாஸ் வென்றார்களோ அவர்கள் தான் போட்டியையும் வென்றுள்ளனர். கடைசி ஐந்து போட்டிகளில் நான்கு முறை சிஎஸ்கே டாஸ் வென்றதுடன் அந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

இப்படி அணியின் பலம் என்பதை தாண்டி டாஸ் இந்த இரண்டு அணிகளுக்கும் வெற்றியை தீர்மானிக்கும் ஒரு ஃபேக்டராக இருந்து வருவதால் இன்று டாஸ் யார் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் ரசிகர்கள் குறி தவறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்