- Advertisement -
Homeவிளையாட்டுதோனியை அசிங்கப்படுத்தினாரா ரெய்னா? தோனிக்கே இடம் இல்லனா எப்படி என கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள். அப்போ...

தோனியை அசிங்கப்படுத்தினாரா ரெய்னா? தோனிக்கே இடம் இல்லனா எப்படி என கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள். அப்போ சிறந்த அணியில் யாருக்குலாம் இடம்?

- Advertisement-

சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி அனைத்து சீசன்களிலும் சீரான பங்களிப்பைக் கொடுத்து மிஸ்டர் ஐபிஎல் என்றும் சின்ன தல என்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் ரெய்னா. ஆனால் சென்னை அணியோடு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் கடைசி சில சீசன்கள் விளையாடாமல் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்றுவிட்டாலும் கிரிக்கெட் கமெண்ட்ரி செய்தும், சிஎஸ்கே அணியின் அருமை பெருமைகளைப் பற்றி பேசியும் அவ்வப்போது அவர் சிஎஸ்கே ரசிகர்களின் இதயங்களில் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவரின் சமீபத்தைய செயல் ஒன்று இப்போது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவர் மேல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவர் இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்தார். அதில் அவர் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இடம் அளிக்கவில்லை. இதனால் பலரும் அவர் தோனியை அசிங்கப்படுத்திவிட்டார் என்று கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அவரின் சிறந்த அணியில் சென்னை அணியின் ஜடேஜா மட்டுமே இடம்பெற்றிருந்தார்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ ரெய்னாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஒவ்வொருவரும் அந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டுதான் தங்கள் அணியை அறிவிப்பார்கள். அப்படிப் பார்க்கையில் தோனி இந்த சீசனில் பெரிதாக விளையாடததால் அவருக்கு அணியில் இடம் தராமல் இருந்திருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

- Advertisement-

தோனி இந்த சீசன் முழுவதும் இன்னிங்ஸின் கடைசி சில பந்துகளில் இறங்கி அதிரடியாக விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதிலும் சில போட்டிகளில் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறுகிறார். சில போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட் ஆகியுள்ளார். அதனால் சிறந்த அணியில் தோனியை எந்த விதத்தில் சேர்ப்பது எனக் கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் தோனியின் சிறப்பான கேப்டன்சிக்காகவாவது அவருக்கு அணியில் இடம் அளித்திருக்கலாம் என வாதிடுவோரும் உண்டு

ரெய்னா அறிவித்த ஐபிஎல் 2023-ன் சிறந்த அணி
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஷ்வால், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், முகமது சிராஜ், ஜடேஜா, முகமது ஷமி, சாஹல்

கூடுதல் வீரர்கள்
கேமிரான் கிரீன், பதிராணா, யாஷ் தாக்கூர், ஜித்தேஷ் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட்

சற்று முன்