- Advertisement 3-
Homeவிளையாட்டுயுவராஜ் சிங், தோனி மாதிரி.. அவரு தான் உலக கோப்பையை ஜெயிச்சு கொடுக்க போறாரு.. ரெய்னா...

யுவராஜ் சிங், தோனி மாதிரி.. அவரு தான் உலக கோப்பையை ஜெயிச்சு கொடுக்க போறாரு.. ரெய்னா நம்பிக்கை..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பைத் தொடரின் பயிற்சி ஆட்டங்களே விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையும் இந்திய கிரிக்கெட் அணி மீது தான் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளில் முக்கியமான ஐசிசி தொடர்களில் எல்லாம் மற்ற அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற தவறினாலும், ஆஸ்திரேலியாவுக்கு இணையாக இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தது.

ஆனாலும் 11 ஆண்டுகளாக இந்திய அணியால் ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை சொந்தமாக்க முடியவில்லை. 2023 ஆம் ஆண்டில் மட்டுமே இரண்டு பொன்னான வாய்ப்புகள் வர, சொதப்பி அதனை இழந்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

இதனால், அணி தேர்விலும் சில முக்கியமான மாற்றங்களை கையில் எடுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி 20 உலக கோப்பையை நிச்சயம் இந்த ஆண்டு வென்றே தீரும் என்பது தான் பலரது கருத்துக்களாக உள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக பெரும்பாலான கிரிக்கெட் பிரபலங்களுமே இந்திய அணி தான் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்றும், கோப்பையை வெல்ல அதிக பலத்துடன் விளங்கும் அணி இந்தியா தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் என்னென்ன விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “என்னை பொறுத்தவரையில் விராட் கோலி மூன்றாவது வீரராக ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். இதனால் ஜெய்ஸ்வால் நிச்சயமாக ஓப்பனிங் இறங்க வேண்டும். ஜெய்ஸ்வாலும் இளம் வீரராக இருப்பதுடன் பயமில்லாமலும் ஆடி வருகிறார். அவரைப் போல் தான் ஷிவம் துபேவும் பயமில்லாமல் ஆடக்கூடிய வீரர்.

- Advertisement 2-

இதனால் நிச்சயம் துபேவிற்கு ஆடும் லெவனில் ஒரு இடத்தை இந்திய அணி கொடுத்தே ஆக வேண்டும். கொஞ்சம் கூட அசையாமல் நின்ற இடத்தில் இருந்தே சிக்ஸ் அடிக்கும் பவர் ஹிட்டிங் திறமை, துபே போன்ற ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. தோனி மற்றும் யுவராஜ் சிங் வரிசையில் நான் துபேவை அப்படி ஒரு பலமான ஹிட்டராக பார்க்கிறேன்.

இந்திய அணி இந்த ஆண்டு உலக கோப்பை வெல்வதற்கு எக்ஸ் பேக்டராக ஷிவம் துபே இருப்பார். அதேபோல விராட் கோலியை எந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என்பதை ரோஹித் முடிவு செய்ய வேண்டும். மேலும் ஒருவேளை ஜெய்ஸ்வால் ஆடும் லெவனில் இடம்பெற்றால் ஒரு ஆல்ரவுண்டர் களமிறங்குவது அரிதாகி விடும்.

இதனால் ரோகித் சர்மாவிற்கு இந்த ஒரு சில முடிவுகள் மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும் என்றே தெரிகிறது. ஆனால் துபே அணியில் இருந்தால் நிச்சயம் 20 முதல் 30 ரன்கள் அதிகமாக இந்திய அணி சேர்க்க முடியும்” என ரெய்னா கூறியுள்ளார்.

சற்று முன்