- Advertisement -
Homeவிளையாட்டுதோனியோடு ருத்துராஜை ஒப்பிட்டு சூசகமாக பேசிய ரெய்னா. ஒருவேளை அவர் இத தான் மறைமுகமா சொல்ல...

தோனியோடு ருத்துராஜை ஒப்பிட்டு சூசகமாக பேசிய ரெய்னா. ஒருவேளை அவர் இத தான் மறைமுகமா சொல்ல வராரோ என யூகிக்கும் நெட்டிசன்ஸ்

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகத்தான ஒரு வீரராக உள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட். 2023 ஐபிஎல் சீசனை பொருத்தவரை தனது அதிரடியான ஆட்டத்தை களத்தில் வெளிப்படுத்தி எதிரணியை திணறடித்தார் ருத்துராஜ். இந்த சீசனில் மட்டும் அவர் 590 ரன்களை விளாசி, பல்வேறு தருணங்களில் அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

ஆரம்பப் போட்டி முதல் பைனல் போட்டி வரை அவரின் ஆட்டம் அபாரமாகவே இருந்தது. சிஎஸ்கே அணி ஐந்தாவது முறை கோப்பையை வெல்வதற்கு ருத்துராஜின் ஆட்டம் பக்கபலமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியின் கேப்டனாக ருத்துராஜ் வருவார் என்று கூறும் வகையில் அவர் களத்தில் நிதானத்தையும், அதே சமயம் பேட்டிங்கில் அபாரத்தையும் காட்டி வருகிறார்.

தோனி தனது ரசிகர்களுக்காக அடுத்த ஐபிஎல்-லில் விளையாடுவேன் என்று கூறி இருந்தாலும், அவரது உடல்நிலை காரணமாக அவர் விளையாடுவாரா இல்லையா என்பது இதுவரை தெளிவாக தெரியாத நிலையில், சென்னை அணியின் அடுத்த கேப்டன் ஜடேஜாவா இல்லை ருத்துராஜா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றே கூறலாம்.

இதில் ஜடேஜாவிற்கே முன்னுரிமை கொடுக்கப்படலாம் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது. காரணம் ஏற்கனவே ஜடேஜாவை ஒரு முறை சிஎஸ்கே அணி கேப்டனாக நியமித்தது. ஆனால் தொடர் சொதப்பல்கள் காரணமாக அந்த சீசனின் பாதியில் தோனி கேப்டன்சி பொறுப்பை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் இதில் ருத்துராஜின் பெயர் இடம் பெறுகிறது.

- Advertisement-

ருத்துராஜை பொறுத்தவரை ஐபிஎல்-ஐ தாண்டி மகாராஷ்டிரா பிரீமியர் லீகிலும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் வெளிப்படுத்தி வருகிறார். அதேசமயம் அங்கு அவர் புனே அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இது மட்டுமில்ல அது மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் அவருக்கு அனுபவம் உள்ளது. ஒரு கேப்டனாக பார்க்கையில் அவரின் செயல்பாடு பலரையும் கவர்ந்து உள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிக்கலாமே: 3 நாட்களாக நான் என் கணவரோடு செய்தது இது தான் என வீடியோ வெளியிட்ட சூர்யகுமார் யாதவின் மனைவி.

இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ருத்துராஜ் குறித்து சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், ருத்துராஜ் தோனியை போன்றே செயல்படுகிறார். நிதானத்தோடும் பொறுமையோடும் அவர் தோனியை போல இருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் தான் என்பதை ரெய்னா சூசகமாக சொல்கிறாரோ என்று சென்னை அணியின் ரசிகர்கள் யோசிக்க துவங்கி உள்ளனர்.

சற்று முன்