- Advertisement -
Homeவிளையாட்டுஅப்ரிடிக்கு சுரேஷ் ரெய்னா கொடுத்த சிறப்பான அன்பளிப்பு. வீடியோ பதிவிட்டு ரெய்னாவுக்கு நன்றி தெரிவித்த அப்ரிடி

அப்ரிடிக்கு சுரேஷ் ரெய்னா கொடுத்த சிறப்பான அன்பளிப்பு. வீடியோ பதிவிட்டு ரெய்னாவுக்கு நன்றி தெரிவித்த அப்ரிடி

- Advertisement-

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2018-ஆண்டு வரை அந்த அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகள், 398 ஒருநாள் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றளவும் டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் சுரேஷ் ரெய்னா அன்பளிப்பாக வழங்கிய பேட்டின் மூலம் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அப்படி அவர் வெளியிட்டிருந்த அந்த வீடியோ சமூக ஊடகத்தில் அதிகளவு பகிரப்படவே சற்று நேரத்திலேயே வைரலானது.

அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் ஆகியோர் அப்ரிடி-யின் இந்த விளையாட்டின் மீதான இந்த காதல் குறித்து பல்வேறு கருத்துக்களை கமெண்ட்களின் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் தனது வீட்டின் தோட்டத்தில் ரெய்னா வழங்கிய பேட்டின் மூலம் அவர் பந்துகளை விளாசுவதை காண முடிந்தது. இதன்மூலம் அவர் இன்னமும் சரியான பலத்துடனும், நல்ல பேட்டிங் டச்சில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்படி அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக : “பிராக்டிஸ் மேக்ஸ் பர்ஃபெக்ட்”, “தேங்க் யு ரெய்னா ஃபார் திஸ் பேட் ” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த சுரேஷ் ரெய்னாவும் மீண்டும் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் : எப்பொழுதுமே உங்களுக்கு உதவ மகிழ்ச்சி தான். தொடர்ந்து பயிற்சியினை மேற்கொண்டு பிட்டாக இருங்கள் என பதில் அளித்துள்ளார்.

- Advertisement-

அப்ரிடி பதிவிட்ட இந்த வீடியோ 92 ஆயிரம் பார்வையாளர்களையும் தாண்டி, மூவாயிரம் பகிர்வுகளையும் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் : “அப்ரிடி ஒரு லெஜெண்ட், அவர் இன்னமும் கிரிக்கெட்டின் மீது வைத்துள்ள காதல் இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது”. என்று பதிவிட்டுள்ளனர்.

அதே போன்று மேலும் சில ரசிகர்கள் “உலகின் ஆல் டைம் சிறந்த வீரர் அப்ரிடி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று 46 வயதான அவர் இன்னும் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால் அது இது போன்ற ஒரு ஈர்ப்பினால் தான் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்