- Advertisement -
Homeவிளையாட்டுதோனிக்கு கொடுத்த இந்த மரியாதைய கோலி, ரோஹித்துக்கும் கொடுங்க.. பிசிசிஐக்கு ரெய்னா கொடுத்த ஐடியா..

தோனிக்கு கொடுத்த இந்த மரியாதைய கோலி, ரோஹித்துக்கும் கொடுங்க.. பிசிசிஐக்கு ரெய்னா கொடுத்த ஐடியா..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு இரண்டு ஜாம்பவான்கள் முக்கிய காரணமாக இருந்து வந்தனர். இந்த தொடர் முழுக்க சிறந்த பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகியவற்றை வெளிப்படுத்தி இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி இருந்தார் ரோஹித் ஷர்மா. இதே போல விராட் கோலி அனைத்து போட்டிகளில் தடுமாறி இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான இறுதி போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ஸ்கோரை மீட்டெடுத்து இருந்தார்.

இவர்களைப் போல பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பல இந்திய வீரர்களும் தங்களின் பங்களிப்பை தொடர் முழுக்க சிறப்பாக கொடுக்க இந்திய அணி உலக கோப்பையையும் வெற்றி பெற்றிருந்தது. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தற்போது தங்களின் ஓய்வையும் அறிவித்திருந்தனர்.

இதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை குவிப்பதற்கான வழிகளிலும் இனிமேல் அவர்கள் இறங்குவார்கள் என தெரிகிறது. அதே போல, உலக கோப்பையை 13 ஆண்டுகள் கழித்து சொந்தமாக்கி இந்தியா வந்தடைந்திருந்த வீரர்களுக்கு வேற லெவல் வரவேற்பையும் ரசிகர்கள் கொடுத்திருந்தனர்.

இதே போல, ரோஹித் மற்றும் கோலி உள்ளிட்ட பலரும் எமோஷனலாக மும்பை வான்கடே மைதானத்தில் தெரிவித்திருந்த கருத்தும் அதிக கவனம் பெற்றிருந்தது. இதனிடையே, அவர்கள் இரண்டு பேரை பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்த கருத்து தற்போது அதிகம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement-

“பிசிசிஐ, கோலியின் 18 மற்றும் ரோஹித்தின் 45 ஆகிய ஜெர்சி நம்பர்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும். தங்களுடைய அலுவலகங்களில் இந்த ஜெர்சி எண்ணை வைத்திருக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாக வேண்டும். இந்த இரண்டு ஜெர்சி எண்கள் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.

இதனால் அணியில் எந்த வீரர்கள் இணைந்தாலும் இந்த நம்பரை பார்க்கும் போது அவர்களுக்கு ஒரு மோட்டிவேஷன் உருவாக வேண்டும்” என சுரேஷ் ரெய்னா கூறி உள்ளார். இதற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்த சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி நம்பர் 10 மற்றும் உலக கோப்பைகளை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்த கேப்டன் தோனியின் ஜெர்சி நம்பர் 7 ஆகியவற்றிற்கு பிசிசிஐ ஓய்வினை அறிவித்துள்ளது.

பொதுவாக இது போன்று ஒரு வீரரின் ஜெர்சி எண்ணிற்கு ஓய்வினை அறிவித்தால் அதனை வருங்காலத்தில் ஆடும் வீரர்கள் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்