- Advertisement -
Homeவிளையாட்டுமுதல் போட்டியில் டக் அவுட்.. தோனி சொன்ன அந்த வார்த்தை.. மலரும் நினைவை பகிர்ந்த சுரேஷ்...

முதல் போட்டியில் டக் அவுட்.. தோனி சொன்ன அந்த வார்த்தை.. மலரும் நினைவை பகிர்ந்த சுரேஷ் ரெய்னா

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோனி ஓய்வு பெற்ற தினத்தன்று தனது ஓய்வினை அறிவித்தார். இந்திய கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி தோனியன் தலைமையின் கீழ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் ரெய்னாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய புகழ் உள்ளது.

ஏனெனில் சி.எஸ்.கே அனிக்காக தல தோனி எந்த அளவு பாராட்டப்படுகிறாரோ, அதே அளவிற்கு சென்னை அணியின் வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் பாராட்டுகளை பெற்று வருகிறார். அதோடு சி.எஸ்.கே அணியின் சகாப்தத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான முதல் போட்டியின் போது ஏற்பட்ட நிகழ்வு குறித்து தற்போது சுரேஷ் ரெய்னா மனம்திறந்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த 2005-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக என்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானேன்.

ஆனாலும் அந்த போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்ததால் வருத்தத்துடன் பெவிலியனை நோக்கி நடந்தேன். அதனால் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் அந்த இன்னிங்ஸ் முடிவடைந்த பிறகு டிராவிட், தோனி, இர்ஃபான் பதான் ஆகியோர் என்னிடம் வந்து வருத்தப்பட வேண்டாம் சாதாரணமாக இருங்கள் என்று என்னை தேற்றி விட்டு சென்றனர்.

- Advertisement-

அதிலும் குறிப்பாக தோனி என்னிடம் வந்து பேட்டிங் செய்ய வேண்டிய இன்னிங்ஸ் முடிந்து விட்டது. இனி நீ பில்டிங்கில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படு அப்போது நிச்சயம் உனக்கு நம்பிக்கை பிறக்கும் என்று கூறினார். அதேபோன்று நானும் பீல்டிங்கில் உத்வேகத்துடன் செயல்பட்டு இலங்கை வீரர் அட்டபட்டுவை ரன் அவுட் செய்தேன். அப்போது என்னுடைய திறன் மீது எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தது.

அதன்பிறகு நான் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டேன் என ரெய்னா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்ததால் தாங்கள் விளையாடிய காலத்தில் நல்ல சூழல் இருந்ததாகவும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து விளையாடிய போது மிக மகிழ்ச்சியுடன் விளையாடியதாகவும் ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்