- Advertisement -
Homeவிளையாட்டுமீண்டும் டி20 போட்டியில் கால் பதிக்க போகும் சிஎஸ்கே-வின் சின்ன தல ரெய்னா. ஏலத்தில் அவருக்கான...

மீண்டும் டி20 போட்டியில் கால் பதிக்க போகும் சிஎஸ்கே-வின் சின்ன தல ரெய்னா. ஏலத்தில் அவருக்கான அடிப்படை விலையே பல லட்சங்கள்.

- Advertisement-

சென்னை அணியின் சின்ன தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இவர் சென்னை அணிக்காக ஐபிஎல்-லில் விளையாடிய பல போட்டிகள் இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது. கடைசியாக அவர் சென்னை அணிக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார்.

சென்னை அணிக்காக அவர் 11 சீசன்கள்(2008 முதல் 2021) விளையாடி உள்ளார். அதே சமயம் அவர் அணியில் இருக்கும்போது சென்னை அணி நான்கு முறை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஏலத்திற்கு முன்னதாக அவர் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரை வேறு யாரும் ஏலத்தில் வாங்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தான் அவர் தற்போது இலங்கையில் வருடா வருடம் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்க்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையை சேர்ந்த பேப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, சுரேஷ் ரெய்னா எல்பிஎல் 2023 போட்டியில் பங்கேற்க்க அடிப்படை விலையாக 50,000 அமெரிக்க டாலர் நிர்ணயிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏலம், வருகின்ற ஜூன் 14ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

ஏற்கனவே 500 வீரர்கள் இதற்க்கு பதிவு செய்துள்ளதாகவும் அதில் 140 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்றும் எல்பிஎல் நிர்வாக தெரிவித்துள்ளது. மொத்தம் இதில் 5 அணிகள் இடம்பெற உள்ளது. ஓவ்வொரு அணியும் ஏலத்தில் 5,00,000 அமெரிக்க டாலர்களை செலவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கோலிய அவுட் ஆக்க நாங்க விரித்த வலை இது தான். சரியாக அதில் அவரே வந்து சிக்கிக்கிட்டாரு – வெற்றிக்கு பின் ஸ்காட் போலந்து பேச்சு

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், சவுத் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் போன்றோரும் இதில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஏலத்தில் ரெய்னா நிச்சயம் ஒரு நல்ல தொகைக்கு வாங்கப்படுவார் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்