- Advertisement 3-
Homeவிளையாட்டுகொஞ்சம் விட்டா என் காலையே உடைச்சுருவாரு.. சூர்யகுமார் பயந்து பார்த்த பவுலர்.. காரணம் இதான்..

கொஞ்சம் விட்டா என் காலையே உடைச்சுருவாரு.. சூர்யகுமார் பயந்து பார்த்த பவுலர்.. காரணம் இதான்..

- Advertisement 1-

17வது ஐபிஎல் சீசனில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை தற்போது வேறொரு லெவலில் தான் இருந்து வருகிறது. அந்த அணியில் ஏராளமான சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இருந்த போதிலும் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை கண்டிருந்தனர். அந்த அணிக்குள் ஏகப்பட்ட குழப்பங்களும், பிளவுகளும் இருந்ததாக தகவல்கள் வெளியாகி விமர்சனத்தை உண்டு பண்ண அதன் மூலம் நெருக்கடியால் அவர்கள் இந்த முறை தொடர் தோல்விகளை சந்திப்பார்கள் என்றும் கருதப்பட்டது.

ஆனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற, வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்திருந்தது மும்பை அணி. அவர்கள் இந்த போட்டியையும் முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 196 ரன்களை ஆர்சிபி அடித்த போதிலும் அதனை மிக எளிதான ஸ்கோராக மாற்றி இருந்த மும்பை அணி, 16 வது ஓவரிலேயே எட்டிப் பிடித்தது. இதற்கு மிக முக்கிய காரணமாக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவின் அரைச்சதம் அமைந்திருந்தது.

அதிலும் காயம் காரணமாக ஒரு சில போட்டிகள் ஆடாமல் இருந்த சூர்யகுமார், டெல்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி டக் அவுட்டாகி இருந்தார். ஆனால், ஆர்சிபி அணிக்கு எதிராக பழைய ஃபார்முக்கு அவர் திரும்பி உள்ளது மும்பை அணிக்கு மிகப்பெரிய சாதகமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அடுத்து வரும் போட்டிகளில் இதே ஃபார்மை அவர் தொடர்ந்தால் நிச்சயம் மும்பை அணி அசைத்துப் பார்க்க முடியாத அணியாக மாறவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

17 பந்துகளில் அரைச்சதம் அடித்து மும்பை அணி சீக்கிரமாக வெற்றி பெற காரணமாக இருந்த சூர்யகுமார், போட்டிக்கு பின் பேசுகையில், “வான்கடேவில் திரும்பி ஆடுவது எப்போதுமே ஒரு அருமையான விஷயம் தான். காயம் காரணமாக பெங்களூரில் நான் சரியாகிக் கொண்டிருந்தபோது என் மனது எல்லாம் மும்பையில் தான் இருந்தது. 200 ரன்களை நோக்கி சேஷ் செய்யும் போது டியூ பாக்டரை முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டும்.

- Advertisement 2-

அப்போது உங்களின் வாய்ப்புகளை பயன்படுத்தி ரன்களை சேர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும். ரோஹித் மற்றும் இஷான் கிஷன், முதல் 10 ஓவர்களில் எங்களுக்காக வேலையை செய்து முடிக்க ரன் ரேட்டிற்காக நாங்கள் சீக்கிரம் போட்டியை முடிக்க வேண்டும் என்பது தான் மனதில் இருந்தது. எதிரணியின் ஃபீல்டிங் அடிப்படையில் நான் ஷாட்களை அடிக்க வேண்டும் என்பதை பற்றி பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

இஷான் கிஷனை பொறுத்தவரையில் அணி நிர்வாகம் அவரை மிக ஜாலியாக ரசித்து ஆடும்படி அறிவித்து அனுப்புகிறார்கள். பும்ராவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் நெட் பயிற்சியில் அவர் பந்தை நான் சந்தித்து இரண்டு, மூன்று ஆண்டுகளாகி விட்டது. ஏனென்றால் அவர் என் பேட்டை உடைத்து விடுவார், இல்லையென்றால் என் காலை குறி பார்த்து விடுவார்” என சூர்யகுமார் கூறியுள்ளார்.

சற்று முன்