- Advertisement -
Homeவிளையாட்டுகம்பீரை தாண்டி.. சூர்யகுமார் புது கேப்டனாக மாற முக்கிய காரணமாக இருந்த ஒருவர்.. கசிந்த உண்மை..

கம்பீரை தாண்டி.. சூர்யகுமார் புது கேப்டனாக மாற முக்கிய காரணமாக இருந்த ஒருவர்.. கசிந்த உண்மை..

- Advertisement-

இந்திய அணியின் சிறந்த டி20 வீரரான சூர்யகுமார் யாதவிற்கு அடுத்த சில தினங்கள் மிக முக்கியமானதாக மாறப் போகிறது. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் 27ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி வந்த ரோஹித் ஷர்மா, அதிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.

இதனால் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்படுவார் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவிக்கப்பட சூர்யகுமார் யாதவ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த முடிவால் ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனங்கள் உருவாகி இருந்தாலும் இதற்கு தக்க காரணத்தையும் பத்திரிகையாளர் சந்திப்பில் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தெரிவித்திருந்தனர். ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரால் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து ஆட முடியாமல் கூட போகலாம்.

இதனால் டி20 போட்டிகளில் எப்போதும் ஃபிட்டாக ஒரு போட்டியை கூட தவறவிடாமல் ஆடிவரும் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன் வாய்ப்பும் கிடைத்திருந்தது. இதனால் பலரும் கம்பீரின் தேர்வு சரியாக இருக்கும் என குறிப்பிட்டு வர இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே இது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement-

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த போதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் சூர்யகுமார் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் ராகுல் டிராவிட் தான் சூர்யகுமாரிடம் இருக்கும் கேப்டன்சியை கண்டுபிடித்ததாக குறிப்பிடும் பராஸ் மாம்ப்ரே இதுகுறித்து தொடர்ந்து பேசுகையில், “ஒருவரை நீங்கள் கேப்டனாக தேர்வு செய்தால் அவர் அனைத்து போட்டிகளிலும் ஆடக்கூடியவராக இருக்க வேண்டும். இதனால் பயிற்சியாளர்களும், தேர்வாளர்களும் எப்போதுமே சூர்யகுமார் டி20 வடிவிற்கு நீண்ட காலம் ஆடக்கூடிய வீரர் என்று கருதி உள்ளோம்.

அதில் அவரது திறமையும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் தற்போதுள்ள டி20 சர்வதேச போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹென்ரிச் கிளாசன் ஆகிய இருவர் தான் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இந்தியாவிற்காக போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதற்கான தாக்கமும் சூர்யாவிடம் அபாரமாக உள்ளது.

சூர்யகுமார் யாதவ் நிறைய இளம் வீரர்களுடன் உரையாடுவதை நான் பார்த்துள்ளேன். கோலி மற்றும் ரோஹித் ஆகியோரை போல அனுபவமுள்ள சூர்யகுமார் இளம் வீரருடன் மிக நெருக்கமாக பழகக் கூடியவர். அனைவரிடமும் நட்பாக இருக்கக் கூடியவர். அவருக்கு இளம் வீரர்கள் மத்தியில் நல்ல மதிப்பும், மரியாதையும் உள்ளது.

இன்னும் பல ஆண்டு கிரிக்கெட் அவரிடம் இருப்பதால் நிச்சயம் அவர் கேப்டன் ஆவதற்கு சிறந்த தேர்வு என்று நான் கூறுவேன்” என பராஸ் மாம்ப்ரே குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்